புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2014

    இப்படியொரு காட்சிக்கு லட்சுமிமேனன் எப்படி சம்மதித்தார்?

கோடம்பாக்கத்தில் இதுதான் இப்போதைய பரபரப்பு. விஷால், லட்சமி மேனன், இனியா நடிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் நான் சிகப்பு மனிதன்.

இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வரும்11ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. படத்தில் விஷாலுக்கும் லட்சுமிமேனனுக்கும் நடுவே ஒரு உதட்டு முத்தக் காட்சி இருப்பதாக ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். அதைக் கூட லட்சுமிமேனன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். நான் சிகப்பு படம் வெளியாக இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் படத்தை தணிக்கைக் குழுவினருக்கு திரையிட்டு காண்பித்துள்ளனர்.
ஆனால் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், படத்தில் அந்த குறிப்பிட்ட முத்தக்காட்சி இடம்பெற்றால் ‘யு/ஏ’ சான்றிதழ் தான் வழங்குவோம் என்று சொல்விட்டார்களாம். அதேநேரத்தில் அந்தக் காட்சியை நீக்கினால் மட்டுமே ‘யு’ சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே அந்த குறிப்பிட்ட முத்தக் காட்சியின் புகைப்படத்தை இணையதளத்தில் யாரோ பரவ விட்டுள்ளனர். தற்போது சமூக வலைத்தளங்களில் அந்த புகைப்படம்தான் வேகமாக பரவி வருகிறது.
இப்படியொரு காட்சிக்கு லட்சுமிமேனன் எப்படி சம்மதித்தார்? அவருக்கென ஒரு குடும்ப இமேஜ் இருக்கிறதே, அதை தாண்டி அவரால் இதை ஒப்புக் கொள்ள முடிந்ததற்கு காரணம், எக்ஸ்ட்ரா சம்பளமாக இருக்குமோ என்றெல்லாம் தலையை பிய்த்துக் கொண்டார்கள் ரசிகர்கள். அதுமட்டுமல்ல, பாண்டியநாடு ஹிட் என்றவுடன் அடுத்த படத்திலும் லட்சுமிமேனனை நடிக்க வைக்கக் காரணம் சென்ட்டிமென்ட்டாக இருக்கலாம் என்ற பேச எழுகிறது

ad

ad