சனி, ஏப்ரல் 05, 2014

புதுச்சேரியில் விஜயகாந்த் பெயர் மற்றும் கட்சி கொடியை பயன்படுத்த தே தி மு க தடை
புதுச்சேரியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயர் மற்றும் படத்தையும், கட்சியின் பெயர் மற்றும் கொடியையும் யாரும் பயன்படுத்தக் கூடாது என தேமுதிக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.புதுச்சேரியில் பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து, பாமக தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. இந்நிலையில் யாரை ஆதரித்தாலும் கூட்டணிக்குள் தேவையில்லாத பிரச்னை ஏற்படும் என்பதால் இந்த முடிவை தேமுதிக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.