புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2014


ஜெ., குற்றச்சாட்டு : பிரவீன்குமார் விளக்கம்
 



நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.சுந்தரத்தை ஆதரித்து ஜெயலலிதா பிரச்சாரம் மேற் கொண்டார். அப்போது அவர், ’’ஜனநாயக வழிமுறைகளை மீறி வேட்பாளர்
செலவுக்கணக்கு குறித்து தேவையற்ற கெடுபிடிகளைக் கையாளும் தேர்தல் ஆணையம் மீது அதிமுக சார்பில் வழக்கு தொடுக் கப்படும்’’ என்று கூறினார்.


’’தேர்தல் ஆணையம் பழைய சட்டவிதிகளின் படியே நடவடிக்கை எடுத்து வருகிறது.  தொகுதியின் வேட்பாளர் பிரசார மேடையில் இருப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது நியாயமற்றது. வேட்பாளரின் பெயரை குறிப்பிட்டு கட்சியின் தலைவர் வாக்கு சேகரித்தால் அந்த நிகழ்ச்சியின் மொத்த செலவும் வேட்பாளரின் செலவு கணக்கில் கொண்டு வரும் தேர்தல் ஆணையத்தின் நடைமுறை நியாயமற்றது. இதற்கு எதிராக வழக்கு தொடரப் போகிறேன் என்று கூறினார்’’ என்றும் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார்.

இது குறித்த செய்தியாளர் கேள்விக்கு தமிழ்மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் பதில ளித்தார். அவர்,  ‘’ஆணையம் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகள் ஏற்கனவே நடைமுறையில் இருப்பது தான்; கட்சியின் தேர்தல் செலவிற்கு உச்சவரம்பு கிடையாது; அதனால் கூட்டத்தில் வேட்பாளரின் பெயர் குறிப்பிட படாமல் இருந்தால் அது கட்சி செலவில் தான் சேரும்’’ என்று தெரிவித்தார்.

ad

ad