புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2014

பேரவைத் தேர்தலிலும் தே.ஜ. கூட்டணி தொடரும்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என பாஜக மாநிலத் தலைவரும், கன்னியாகுமரி
மக்களவைத் தொகுதி வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஒன்றியம் மற்றும் குழித்துறை நகர தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் குழித்துறையில் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தமிழகத்தில் 1962-ல் திமுக வலுவான கூட்டணியை அமைத்து, 1967-ல் அக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. 1972-ல் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அதிமுக, 1977-ல் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது.
அதன்பின்னர் இப்போது வரை அக்கட்சிகள் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்கவில்லை.
இந்த இரு கட்சிகளையும் விட பலம் வாய்ந்த கூட்டணியை பாஜக இப்போது அமைத்துள்ளது. இக்கூட்டணி அதிக இடங்களைப் பிடிக்கும். தேர்தல் முடிந்தது, கூட்டணி முறிந்தது எனக் கூறாமல் 2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் இக்கூட்டணி தொடரும் என்றார் அவர்.

ad

ad