புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2014

இலங்கைக்கான  முழு பொருளாதார அபிவிருத்தி வேலைகளும் தென்மாகாணத்துக்கே கொண்டு சேர்க்கிறார்  ஜனாதிபதி 
இலங்கையின் தென்மாகாணத்தின் மாவட்டம் ஒன்றில் தனியார் மின்சக்தி நிலையம் மற்றும் பாரிய அபிவிருத்திகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.


எனினும், மற்றுமொரு மாவட்டம், சிறுநீரக நோய் காரணமாக அதன் மக்களை இழந்து வருகிறது.
இந்தநிலையில் இலங்கையின் ராஜபக்ச நிர்வாகம், ஜெனீவா உட்பட்ட முகாமைத்துவ பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாக இலங்கையின் ஆங்கில செய்தித் தாளொன்றின் ஆசிரியர் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சொந்த ஊரான தங்காலையில் உள்ள மெத முலனவில் பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும் கடந்த மாகாணசபைத் தேர்தலின் போது தென்மாகாணத்தில் ஜனாதிபதியின் கட்சி, பாரிய பின்னடைவை கண்டது.
2009 ஆம் ஆண்டு தேர்தலை காட்டிலும் 2014 ஆம் ஆண்டு மாகாணசபை தேர்தலில் அவரின் கட்சி 9 வீத வாக்கு வீழ்ச்சியை அடைந்தது.
மஹிந்த ராஜபக்சவை பொறுத்தவரையில் தமது ஊர் அமைந்துள்ள பிரதேசத்துக்கு இடையறா மின்சார விநியோகத்தை வழங்கும் வகையில் வியட்நாமிடம் இருந்து கிலோ வோட்ஸுக்கு 8.19 ரூபாவுக்கும், இந்தியாவிடம் (கேரளாவிடம்) இருந்து 9.80ரூபாவுக்கும், பங்களாதேஸிடம் இருந்து 9.87 ரூபாவுக்கும், தென்கொரியாவிடம் இருந்து 11 ரூபாவுக்கும் தாய்லாந்திடம் இருந்து 12.90 ரூபாவுக்கும் இந்தியா ( தமிழகத்தில் இருந்து) 15.40 ரூபாவுக்கும், மலேசியாவில் இருந்து 15.90 ரூபாவுக்கும் இலங்கையின் தனியார் நிறுவனம் ஒன்றிடம் இருந்து 17.89 ரூபாவுக்கும் மின்சார கொள்வனவை மேற்கொள்ளவுள்ளார்.
எனினும் ஏனைய 14 மாவட்டங்களில் மின்சார தேவை பூர்த்தி செய்யப்படவில்லை என்று செய்தித்தாளின் ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முல்லைத்தீவில் 40 வீதமானோரும், கிளிநொச்சியில் 46 வீதமானோரும் அம்பாறையில் 81 வீதமானோரும், திருகோணமலையில் 86 வீதமானோரும் மட்டக்களப்பில் 81 வீதமானோரும் மாத்திரமே மின்சார விநியோகத்தை கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் 60 வீதமானோரும் மன்னாரில் 74 வீதமானோரும் வவுனியாவில் 84 விதமானோரும் மின்சார விநியோகத்தை கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் தமது மாவட்டத்துக்கு மாத்திரம் ஜனாதிபதி முன்னுரிமை வழங்கி வருவதாக செய்திதாள் ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மேற்கொள்ளவுள்ள விசாரணைகள் குறித்து இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த விசாரணைகளில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பங்கேற்குமா? என்று தெளிவுப்படுத்தப்படவில்லை.
இதற்கிடையில் இந்திய காங்கிரஸ் காபந்து அரசாங்க தலைவர்களை சந்திக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுமதி கோரியிருந்த போதும் அங்கு தேர்தல் நடைபெறுவதால் அனுமதி கிடைக்கவில்லை.
இதன்காரணமாகவே கூட்டமைப்பினர் தென்னாபிரிக்காவுக்கு சென்று உண்மையை கண்டறியும் குழு பற்றி பேச்சு நடத்தினர்.
இலங்கையில் தற்போது புதுவருடத்துக்காக நீண்ட விடுமுறை ஒன்று விடப்பட்டுள்ளது.
இது முடிவடைய மீண்டும் ஜெனீவாவின் பாதிப்பு இலங்கையை நோக்கி நகரும் அதேநேரம் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கமும் அவரின் அமைச்சரவையும் முகாமைத்துவப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பர் என்றும் ஆங்கில செய்தித்தாளின் ஆசிரியர் எதிர்வுகூறியுள்ளார்.

ad

ad