புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2014

இலங்கை விடயம் தொடர்பில் எரிக் சொல்ஹெய்ம் ,நிஷா பிஸ்வால் பேச்சு 
news
அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் மற்றும் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருக்கு இடையில் இலங்கை விடயம் தொடர்பில் கருத்து பகிர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.


அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான உதவி இராஜாங்க செயலாளராக பதவியேற்ற பிஸ்வால் கடந்த பெப்ரவரியில் இலங்கைக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.


இதன்பின்னர் அவர் இலங்கை விடயங்கள் தொடர்பில் கருத்தாடல்களில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் எரிக் சொல்ஹெய்முடன் அவர் டுவிட்டரில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இலங்கை விடயம் தொடர்பில் எரிக் சொல்ஹெய்முடன் கருத்து பகிரக் கிடைத்தமையை பிஸ்வால் மகிழ்ச்சியை வெளியிட்டார்.

இதன்போது கருத்துரைத்துள்ள எரிக் சொல்ஹெய்ம், இலங்கையின் அனைத்து சமூகங்களும் சமாதானமாக வாழ அமரிக்காவும் பிஸ்வாலும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை மீது சர்வதேச விசாரணையை கோரியுள்ளமை தொடர்பிலேயே இந்த டுவிட்டர் கருத்துப்  பரிமாறல் இடம்பெற்றுள்ளது.

ad

ad