புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2014

கடவுச் சொற்களை மாற்றிக்கொள்ளுமாறு தொழில்நுட்ப நிறுவனங்கள் மக்களிடம் கோரிக்கை!
கடவுச் சொற்களை மாற்றிக் கொள்ளுமாறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இணைய பயன்பாட்டாளர்கள் பாரியளவு ஆபத்தை எதிர்நோக்கி வருவதாக தொழில்நுட்பவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, இணையப் பயன்பாட்டாளர்கள் தங்களது கடவுச் சொற்காளை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது என தெரிவித்துள்ளனர்.
வங்கி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட மிக முக்கியமான விடயங்கள் தொடர்பிலான கடவுச் சொற்களை மாற்றிக் கொள்ளுமாறு ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளது.
ஹார்ட்பிலீட் பக் என்னும் வைரஸ் தாக்கம் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர்களின் கடவுச் சொற்களை கொள்ளையிடக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தொழில்ழநுட்பவியலாளர்கள் அறிவித்துள்ளனர்.
சேர்வர் கணனிகளுக்கும் க்ளைன்ட் கணனிகளுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றத்தின் போது இந்த வகை வைரஸ் தாக்குதல் இடம்பெறுவதாகவும்ää இதனால் தகவல்கள் திருடப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
நிச்சயமாக இவ்வாறான தாக்குதல் இடம்பெறுமா என்பதனை குறிப்பிட முடியாது என்ற போதிலும், கடவுச் சொற்களை மாற்றிக் கொள்வதில் பாதிப்பு எதுவும் ஏற்படப் போவதில்ஐ என தெரிவித்துள்ளனர்.
எனவே, கடவுச் சொற்களை மாற்றி பயனர்கள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.

ad

ad