புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2014

ஜ.ம.மு.வில் மனோ, குகவரதன் ஐ.தே.க.வில் மரிக்கார், முஜிபுர்

மேல் மாகாண சபை தேர்­தலில் கொழும்பு மாவட்­டத்தில் தனித்துப் போட்­டி­யிட்ட ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் மனோ கணேசன் அதிக விருப்பு வாக்­கு­களைப் பெற்று முத­லா­மி­டத்தை பெற்­றுள்­ள­தாக நேற்றிரவு தெரி­விக்­கப்­பட்­டது. அத்­துடன் அக் கட்­சியின் சார்பில் சண். குக­வ­ரதன் இரண்டாம் இடத்­தி­னையும் பெற்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது.
ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் மஞ்சு ஸ்ரீ அரங்­கல, எஸ்.எம்.மரிக்கார், முஜிபுர் ரகு
மான், எம்.எஸ்.எம். பைரூஸ்­ஹாஜி ஆகியோர் விருப்பு வாக்­கு­களின்
அடிப்­ப­டையில் முன்­னிலைப் பெற்­றி­ருந்­தனர்.
 
அத்­துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் சார்பில் போட்­டி­யிட்ட அர்ஷாட் நிசா­மு­தீனும், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சார்பில் ஏ.ஜே.எம்.பாயிஸ் ஆகி­யோரும் முன்­னிலை அடைந்­தி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.
 
இதே­வேளை, களுத்­துறை மாவட்­டத்தில் ஐக்­கிய தேசியக் கட்சி சார்பில் போட்­டி­யிட்ட ஜகத் விதான (29,920) வாக்­கு­களை பெற்று முதலாம் இடத்­தி­னையும், ஜ. ஜெமில் (24,576), ஜி.பீ. அபே­ரட்ன (20,797) வாக்­கு­களைப் பெற்று இரண்டாம் மூன்றாம் இடத்­தி­னையும் பெற்­றி­ருந்­தனர்.
ஜன­நா­யகக் கட்சி சார்பில் போட்­டி­யிட்ட ரவிந்­திர யஸஸ் (12,885), அருணா தீபால் (12,569) முதலாம் இரண்டாம் இடங்­களைப் பெற்­ற­தோடு மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் நலிந்த ஜய­திஸ்ஸ (11,949) முத­லா­மி­டத்­தையும் பெற்­றுள்ளார்.
 
கம்­பஹா மாவட்­டத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் போட்­டி­யிட்ட ஹர்­சன ராஜ­க­ருணா (51,018) விருப்பு வாக்­கு­களைப் பெற்று முத­லா­மி­டத்­தி­னையும், கவிந்த ஏசான் (41,654), எட்வேட் குண­சே­கர (29,944), ஜோர்ச் பெரேரா (29,703) பெற்று முறையே இரண்டாம் மூன்றாம் நான்காம் இடங்­களை தம­தாக்­கிக்­கொண்­டனர்.
 
ஆளும், எதிர்க்­கட்­சியின் அபேட்­ச­கர்கள் சிலர் தமக்கு கிடைத்த விருப்பு வாக்­கு­களின் எண்­ணிக்­கையில் அதி­ருப்தி அடைந்­ததன் கார­ணத்தால் விருப்பு வாக்கு எண்ணும் பணிகள் நள்ளிரவைத் தாண்டி தொடர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையிலேயே பத்திரிகை அச்சேறும் வரை கிடைக்கப்பெற்ற முடிவுகளே இவை என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad