புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2014

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா நடுநிலை வகித்தது  ஏன்?- சுதர்சன நாச்சியப்பன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா நடுநிலை வகிதமைக்கான காரணத்தை மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் விளக்கியுள்ளார்.
இத்தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது, இலங்கையின் மீதான சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
இலங்கை வாழ் தமிழர்களின் மறுகுடியமர்த்தல், அகதிகள் மறுவாழ்வு, தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகிய பணிகளில் இந்திய அரசு அதிக முதலீடு செய்து, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியா இத்தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்தால், இலங்கையில் தமிழர் அதிகமாக வாழும் பகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீனா மேற்கொள்ள வாய்ப்பாக அமைந்திருக்கும்.
இதன் மூலம் இலங்கையின் மீதான சீனாவின் பிடி மேலும் அதிகரித்திருக்கும்.
இதைக் கட்டுப்படுத்த இந்தியா மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கைதான், தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் புறக்கணிப்பு.
இந்தியாவின் இந்த முடிவு இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வுக்கும், வாழ்வாதாரத்துக்கும் வலு சேர்க்கும்.
இலங்கையின் வடக்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலிருந்து இராணுவ பாதுகாப்பைத் திரும்பப் பெறுவதற்கும், இதன் மூலம் வழி ஏற்பட்டுள்ளது.
தமிழர்களின் நிலங்களைத் திரும்ப ஒப்படைக்கக்கூடிய ஒரு நிலையும் ஏற்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, ஆந்திர மாநில மீனவர்களின் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் வழி ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கும், தற்போது கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கும் மாறுபாடு உள்ளது என்றார் அவர்.

ad

ad