புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2014

பிரதமராவதற்கு எத்தனை சீட்கள் தேவை என தெரியாதவர் ஒரு முதல்வரா? ஜெயலலிதா மீது வைகோ தாக்கு
வடசென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் சவுந்தரபாண்டியனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வெள்ளிக்கிழமை காலை கொடுங்கையூர் முத்தமிழ்நகரில் தேர்தல் பிரச்சாரம்
மேற்கொண்டார்.

அப்போது பேசிய வைகோ,
மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ், பெட்ரோல் மற்றம் டீசல், கேஸ் விலையை ஏற்றியுள்ளது. இதனால் மற்ற பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தல் கூடடெபாசிட் வாங்காது. 
அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கினார். அவரது பெயரை வைத்து ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். தற்போது அவரை பெயரையே நீக்கிவிட்டு அம்மா அம்மா என்று அழைக்கிறார்கள். ஜெயலலிதா எத்தனையோ ஊழல் செய்துவிட்டு இப்போது வாய்தா வாங்கி கொண்டிருக்கிறார். பெங்களூர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு வந்துள்ளது. இதுபோன்று ஊழல் நிறைந்தவரை பிரதமர் என்று அவரது கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவர் எந்த கூட்டணியில் உள்ளார். பிரதமராவதற்கு எத்தனை சீட்கள் தேவை என தெரியாதவர் ஒரு முதல்வரா? 40 தொகுதிகளில் நின்றுவிட்டு எப்படி பிரதமர் ஆசைக்கு அவர் கனவு காண்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஊழலற்ற ஆட்சி அமைய நரேந்திர மோடி பிரதமராக வேண்டும். அவர் பிரதமரானால் இலங்கையில் தனி ஈழம் மலரும். பாஜக கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு வைகோ பேசினார்.

ad

ad