புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஏப்., 2014

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான உதவிகளை விரிவாக்கும் சிங்கப்பூர்

சிங்கப்பூர் அனைத்துலக நிறுவனத்தால் [Singapore International Foundation] அமுல்படுத்தப்படும் சமுதாய அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் சிறிலங்காவின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 3000 வரையான இளைஞர்கள் பயனைப் பெறவுள்ளனர். இத்திட்டத்தை வெள்ளியன்று சிங்கப்பூர் வெளியுறவு விவகார மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம் யாழ்ப்பாண நூலகத்தில் ஆரம்பித்து வைத்தார்.

10 தொடக்கம் 18 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு ஆங்கில மொழியைப் பயிற்றுவிப்பதை நோக்காகக் கொண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆங்கில மொழியைக் கற்பிப்பதற்குத் தேவையான வளங்கள் பெற்றுக்கொடுக்கப்படுவதுடன், யாழ்ப்பாண ஆங்கில மொழி ஆசிரியர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது.

சிங்கப்பூர் தேசிய நூலக சபையால் யாழ்ப்பாண நூலக இளையோர் அமைப்பிற்கு 10,000 ஆங்கில நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. இலங்கையர்களுக்கு சிங்கப்பூர் நூலக சபையால் நடமாடும் நூலகம் ஒன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

"இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். இதற்காக நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதை ஆராய்கிறோம். ஆகவே இது உண்மையில் மிகவும் அவசியமானதாகும். நீங்கள் இதற்கு உதவினால், சிங்கப்பூரும் இதற்கு உதவினால், நாங்கள் யாழ்ப்பாண இளைஞர்களின் வாழ்வைச் சிறப்பாக்க முடியும். இது நாட்டில் மீளிணக்கப்பாடு மற்றும் சமாதானத்தை உருவாக்க உதவும்" என திரு.சண்முகம் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழன் பிற்பகல் அன்று திரு.சண்முகம் கொழும்பில் அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பில் இரு நாடுகளின் உறவுநிலை நெருக்கமடைவது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

சிங்கப்பூர் மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சுக்களின் அதிகாரிகள் பல்வேறு விடயங்கள் தொடர்பாகப் பேச்சுக்களை நடாத்தினர். இரு தரப்பினராலும் திருத்தியமைக்கப்பட்ட இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டது.

ad

ad