சனி, ஏப்ரல் 05, 2014

கீதாஞ்சலியின் ஏற்பாட்டில் கிரிக்கெட் -நாமல் இளைஞர் அணி Vs பாதுகாப்புப் படையணி:

கிளிநொச்சியில் இன்று மாபெரும் கிரிக்கட் போட்டி

நாளைய இளைஞர் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையிலான கிளிநொச்சி இளைஞர் கிரிக்கெட் அணிக்கும் கிளிநொச்சி படைப்பிரிவின் பாதுகாப்புப் படை கிரிக்கட் அணிக்குமிடையிலான நாமல் கிண்ணம் 2014 கிரிக்கட் போட்டி இன்று ஞாயிறு பிற்பகல் 2.30 மணிக்கு கிளிநொச்சி நகர விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக கிளிநொச்சியில் இவ்வாறானதொரு கிரிக்கட் போட்டி நடத்தப்படுவதாக இதனை ஏற்பாடு செய்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தெரிவித்தார். இது வடக்கு கிழக்கில் தமிழ் இளைஞர்களுக்கும், இராணுவத்தினருக்குமிடையே பரஸ்பரம் ஒரு நல்லுறவைக் கட்டியெழுப்ப உதவும் எனவும் கீதாஞ்சலி தெரிவித்தார். இன்றைய நாள் இலங்கை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதொரு நந்நாளாகும் எனவும் அவர் தெரிவித்தார்.