புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மே, 2014

12ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றும் தற்கொலை செய்த ஏழை சகோதரிகள்

கடலூர் மாவட்டத்தில் சகோதரிகள் இருவர் 12ம் வகுப்புத் தேர்வில் பள்ளியின் முதல் இரண்டு இடத்தை பிடித்தும் ஏழ்மை காரணமாக தற்கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருத்தாசலம் அருகே உள்ள கம்மாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தச்சு தொழிலாளி முருகேசன், இவரது மனைவி ராஜலட்சுமி.இவர்களுக்கு கிருத்திகா, சரண்யா என்ற 2 மகள்கள் இருந்தனர். அக்காள் தங்கையான இருவரும் சிறுவயதில் இருந்தே ஒரே வகுப்பில் ஒன்றா
க படித்து வந்
தார்கள்.
இந்நிலையில்,கம்மாபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் அவர்கள் 12ம் வகுப்பு தேர்வு எழுதினார்கள்.
இதில் சரண்யா 930 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதல் இடத்தையும், கிருத்திகா 928 மதிப்பெண்கள் பெற்று 2வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
அவர்கள் வீட்டில் வறுமையான சூழ்நிலை நிலவியதால், முருகேசனும், ராஜலட்சுமியும் தங்கள் மகள்களின் எதிர்காலம் குறித்து வீட்டில் பேசிக்கொண்டிருந்தனர்.
தங்கள் பிள்ளைகள் 2 பேரையும் ஒரே நேரத்தில் மேல் படிப்பு படிக்கவைக்க பண வசதி இல்லாததால் ஒருவரை மட்டும் மேல் படிப்பு படிக்க வைப்போம் என்றும் மற்றொருவருக்கு திருமணம் செய்து வைத்து விடுவோம் என்று பேசியுள்ளனர்.
இதைக்கேட்டுக் கொண்டிருந்த இரு சகோதரிகளும், வீட்டில் வறுமை உள்ளதால் இருவரும் சேர்ந்து மேல் படிப்பை படிக்க முடியாது.
மேலும் ஒருவருக்கு திருமணம் செய்ய முடிவு எடுத்து இருப்பதால் நாம் பிரிந்து விடும் நிலை உள்ளதே என்று வருந்திய அவர்கள் வாழ்வதை விட சாவதே மேல் என்று தீர்மானித்தனர்.
இதனையடுத்து, வீட்டில் தனியாக இருந்தபோது கிருத்திகாவும், சரண்யாவும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
வீடு திரும்பிய அவர்களது பெற்றோர் தங்கள் மகள்கள் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கதறி அழுதுள்ளனர்.
அதிக மதிப்பெண்கள் பெற்றும் மேல் படிப்பை தொடர முடியாமல் இந்த பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad