புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2014


நீலகிரியில் 1,04,940 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி
தமிழகத்தில் நீலகிரி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் 1,04940 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் - 4,63,700  வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.ராசா - 3,58,760 பெற்று தோல்வியுற்றார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் : வைகோ கருத்து


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அகில இந்திய அளவில் நரேந்திர மோடி ஆதரவு பேரலை மிகப் பெரும்பான்மையான மாநிலங்களில் வீசியதால் பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெறவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரமிக்கத்தக்க மகத்தான வெற்றி பெறவும் வாக்காளப் பெருமக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று பிரதமர் பதவி ஏற்க இருக்கும்

திரு நரேந்திர மோடி அவர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் வாக்காளப் பெருமக்கள் வழங்கி உள்ள தீர்ப்பை ஏற்பதுதான் ஜனநாயகம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஊழலற்ற நேர்மையான அரசியலை வென்றெடுக்கவும், தன்னலமற்ற மக்கள் பொதுத்தொண்டை முன்னெடுக்கவும் உறுதிகொண்டு தொடர்ந்து பாடுபடும். இவ்வாறு கூறியுள்ளார். 
திமுகவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு
காரணம் என்ன?நடிகை குஷ்பு பதில்
 சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கலைஞர் வீட்டுக்கு நடிகை குஷ்பு காலை 10.30 மணியளவில் வந்தார். சுமார் 20 நிமிடம் வரை கலைஞர் இல்லத்தில் இருந்த குஷ்பு, 10.50 மணிக்கு வெளியே வந்தார்.
அப்போது அவரிடம், தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு காரணம் குறித்து உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் கேட்டனர்.
ஜெயலலிதாவுகு ரஜினிகாந்த் வாழ்த்து


மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, தேசிய அளவில் 3வது  இடத்திற்கு அதிமுக வந்துள்ளது.  இதற்காக நடிகர் ரஜினிகாந்த், ஜெயலலிதாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ad

ad