புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மே, 2014

நைஜீரியாவில் மேலும் சில சிறுமிகள் ஆயுததாரிகளால் கடத்தல் 
நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள கிராமம் ஒன்றிலிருந்து 12 தொடக்கம் 15 வயதிற்கு உட்பட்ட மேலும் சில சிறுமிகளை போகோ ஹராம் ஆயுததாரிகள் கடத்தியுள்ளனர்.
 
கடந்த மாதம் பாடசாலையொன்றில் இருந்து 200ற்கும் அதிகமான சிறுமிகள் கடத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினமும் 8 சிறுமிகள் கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
ஏற்கனவே கடத்தப்பட்ட 230 க்கும் அதிகமான சிறுமிகளை விற்பனைச் செய்யப் போவதாக போஹோ ஹராம் ஆயுததாரிகள் எச்சரித்திருந்த நிலையில், குறித்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது 
 
மேலும் கடத்தப்பட்ட சிறுமிகளுடன் அப்பகுதியிலிருந்த கால்நடைகள் மற்றும் அவற்றிற்கான உணவுப் பொருட்களையும் கொண்டு சென்றுள்ளதாகவும், குறித்த பகுதியில் போதுமான தொடர்பாடல் வசதியின்மையினாலேயே இந்த கடத்தல் தொடர்பான உடனடி  தகவல்கள் வெளிவரவில்லை எனவும்  பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
 
இதேவேளை கடத்தப்பட்ட சிறுமிகளை மீட்பதற்காக நைஜீரியா செல்ல குழுவொன்று தயாராகியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ad

ad