புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2014


தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் : வாக்கு கணிப்புகளை இன்று மாலைக்குப் பிறகு வெளியிடலாம்

தேர்தலுக்கு பிந்தைய வாக்குக் கணிப்பை திங்கள்கிழமை (மே 12) மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியிட லாம் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைக்கு தேர்தல் தொடங்கிய நாளான கடந்த மாதம் 7ஆம் தேதி காலை 7 மணியில் இருந்து, முடிவடையும் நாளான திங்கள்கிழமை (மே 12) மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய வாக்குக் கணிப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான ஹெச்.எஸ். பிரம்மா, "கடைசிக் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் ஏதேனும் சில வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தும் சூழ்நிலை எழலாம். எனவே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான வெள்ளிக்கிழமைக்கு (மே 16) முன்னதாக தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பை வெளியிடக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.
பிரம்மாவின் இந்த பேட்டிக்கு விளக்கம் அளிக்கும் வகையிலேயே, தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ad

ad