புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2014



மே -12 மாலைக்கு பிறகு தேர்தலுக்கு பிந்தைய
 கருத்து கணிப்புக்களை வெளியிடலாம் !
 


 16-வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி தொடங்கி வரும் 12-ந்தேதி வரை 9 கட்டங்களாக நடக்கிறது. இதில் 8 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. கடைசி கட்ட தேர்தல் 41 தொகுதிகளுக்கு 12-ந்தேதி நடைபெற உள்ளது.


தேர்தல் நடக்கும் முன் ஊடகங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டன. கருத்துக் கணிப்புகள் பொதுவாக தேர்தலுக்கு முன்பும் பின்பும் வெளியிடப்படும். தேர்தலுக்கு பின்னர் வெளியிடப்படும் கருத்துக்கணிப்பு வாக்களித்து வெளிவரும் மக்களிடம் கருத்து கேட்டு அதற்கு ஏற்றவாறு கருத்து கணிப்பை தனியார் தொலைக்காட்சிகள் வெளியிடும்.
இந்த நிலையில் தேர்தல் கமிஷனர்களில் ஒருவரான எச்.எஸ்.பிரம்மா, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை மே 16 வரை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பக்கூடாது என்று கூறினார்.
இதன் பின்னர் தேர்தல் ஆணையம், ஒளிபரப்பலாம் என்று அறிவித்துள்ளது.  மக்களவை தேர்தலில் கருத்து கணிப்புகள் வெளியிட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முந்தைய அறிவிப்பின்படி, ஓட்டு எண்ணிக்கை நடக்கும் 16ம் தேதி வரை, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புக்களை வெளியிட தடை விதிக்கப் பட்டிருந்தது.
ஆனால், , ‘’தேர்தல் நடக்கும் கடைசி நாளான மே 12ம் தேதி மாலை 6.30 மணிக்கு பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புக்களை வெளியிடலாம்’’ என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ad

ad