புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மே, 2014


முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் சுப்ரீம் கோட் தீர்ப்பு 


முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக்கோரியும், கேரள அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட வலியுறுத்தியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பை 5 பேர் அடங்கிய அரசியல்சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

முல்லை பெரியாறு அணை
கடந்த 2006–ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின்படி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த கேரள அரசு தவறியது. மாறாக, அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்து கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
அணை பலவீனமாக இருப்பதாக கூறி, முல்லை பெரியாறு அணையின் அருகே புதிய அணை ஒன்றை கட்டுவதற்கு ஏதுவாக கேரள சட்டசபையில் அணை பாதுகாப்பு சட்டம் என்ற ஒரு புதிய சட்டத்தை அம்மாநில அரசு நிறைவேற்றியது. இதன் மூலம் ஒரு மாநில அரசின் முடிவுகளில் அண்டை மாநிலங்கள் தலையிடக்கூடாது என்றும் அந்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனந்த் குழு ஆய்வு
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் குழு ஒன்றை நியமித்து அணையில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது.
அதன்படி ஆனந்த் தலைமையிலான குழு அளித்த அறிக்கையில், அணை மிகவும் பலமாக உள்ளது என்றும், நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்றும், அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அறிக்கை தரப்பட்டது.
இன்று இறுதி தீர்ப்பு
இந்த அறிக்கையை ஏற்க கேரள அரசு மறுப்பு தெரிவித்ததோடு புதிய குழுவை நியமிக்க வேண்டுமென கோர்ட்டில் வலியுறுத்தியது. கேரள அரசின் இந்த வாதத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டு நியமித்த இந்த குழுவானது ஏசி அறையில் அமர்ந்து அறிக்கை தயாரிக்கவில்லை என்றும், நேரடியாக களத்தில் இருப்பதை கண்டறிந்து அறிக்கையாக தாக்கல் செய்தனர் என்றும் நீதிபதி ஆர்.எம்.லோதா தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை கடந்த ஆண்டு ஆகஸ்டு 20–ந் தேதி முடிவடைந்த நிலையில், 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
நீர்மட்டத்தை உயர்த்தலாம்
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று தலைமை நீதிபதி உள்பட 5 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச்  தீர்ப்பை வழங்கியுள்ளது. முல்லை பெரியாறு அணை தொடர்பான கேரள அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது. கேரள அரசு கொண்டுவந்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு புறம்பானது. கோர்ட்டு தீர்ப்புகளை சட்டம் மூலம் தடுக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், முல்லை பெரியாறு அணையை பராமரிக்க 3 பேர் கொண்ட குழுவையும் அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ad

ad