புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2014


நோர்வே முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு 
18.05.2014 மதியம் 1200 மணியனவில் இருந்து பிற்பகல் 3 மணிவரை தமிழ் இளையோர் அமைப்பினரால் தமிழின அழிப்பு தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் நோர்வே மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது அதனைத்தொடர்ந்து பிற்பகல் 3மணியனவில் தமிழின அழிப்பு நாள் ஜந்தாம் ஆண்டு நினைவுப்பேரணி ஒஸ்லோ மத்தி தொடரூந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமாகி நோர்வே பாராளுமுன்றலை வந்தடைந்தது.இப்போராட்டத்தினை மக்கள் அவையினர் ஒழுங்கு செய்திருந்தார்கள்.
தமிழின அழிப்புக்குள்ளான மக்களுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு மரியாதை செ
லுத்தப்பட்டதை தொடர்ந்து நினைவுரை கவிதை கட்டுரை பாடல்கள் என்பன அழிக்கப்பட்ட எம்மக்களின் நினைகளை சுமந்து இடம்பெற்றது இப்போராட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு அநியாயமாக அழிக்கப்பட்ட மக்களுக்கும் இறுதிவரை இலட்சியத்திற்காக உறுதியோடு போராடிய மறவர்களுக்கும் மரியாதை செலுத்தினர்.இப்போராட்டத்தில் சிறப்பு பிரதிநிதியாக டென்மார்க் இளையோர் அமைப்பின் இணைப்பாளர் சுகுணன் மற்றும் நோர்வேயின் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட நோர்வேயின் அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவிக்கையில் சிறீலங்கா அரசு தமிழ்மக்கள் மீது நிகழ்த்தியது இன அழிப்பு என்றும் தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்க நோர்வே அரசு சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
தமிழின அழிப்பை நினைவுகோரும் கவிதை கட்டுரைப்போட்டியும் அன்னைபூபதி தமிழ்கலைக்கூடத்தினால் ஒழுங்செய்யப்பட்டிருந்தது இப்போட்டியில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கெடுத்திருந்தனர் அத்தோடு அவர்களுக்கான கௌரவிப்பும் இந்நிகழ்வில் இடம்பெற்றிருந்தது.
2002  சமாதனம் என்ற போர்வையில் தமிழ்மக்களின் தியாகமும் வீரமும் நிறைந்த விடுதலைப்போராட்டத்தினை சிதைப்பதர்க்கு சிறீலங்காஅரசும் சிறீலங்காஅரசுக்கு முண்டு கொடுக்கும் சக்திகளும் சதித்திட்டம் தீட்டியதை நாம் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் அறிந்திருக்கின்றோம்.
மூன்றாம் அணியாக மூக்கை நுழைத்தவர்களும் ராஜதந்திரஅரசியல் எனும் மாயவலைக்குள் மக்களை ஏமாற்றி சிங்களஅரசுக்கு ஆதரவுக்கரம் கொடுத்து கொலைகாரர்களின் கரங்களை பலப்படுத்தியதையும் மக்கள் மறக்கவில்லை எங்களுடைய இனம் அழிக்கப்பட்டதர்கு மூன்றாம் தரப்புகள் மூலகாரணம் என்பதையும் நாம் அறிவோம் ஏனெனில் இந்த தரப்புக்கள் விடுதலைப்புலிகளின் அசைவுகளை கண்காணித்தார்களே தவிர உண்மையான மனிதநேய மகான்களாக செயற்படவில்லை மாறாக தங்களின் சுயஅரசியல் இலாபங்களுக்காக சிறீலங்காவின் கைப்பொம்மைகளாகவே வலம் வந்தார்கள்.
தமிழீழ விடுதலைப்புலிகளை நிலைகுலைய செய்யவேண்டுமானால் அல்லது அழிக்கவேண்டுமானால் அவர்களது பாதுகாப்பு கவசங்களாக விளங்கும் மக்களை அழித்தாலே
சாத்திப்படும் என்பதை உணர்ந்துகொண்ட சிங்களஅரசும் அதன் தாங்குசக்திகளும் திட்டமிட்டு தமிழின அழிப்பை மேற்கொண்டனர்.
2006-யூலை மாவிலாற்றில் தொடங்கி 2009-ஏப்பிரல் ஆனந்தபுரம் வரைக்கும் விடுதலைப்புலிகளின் வீரமிகு தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு பல்லாயிரக்கணக்கில் காயப்பட்டு அங்கவீனர்களாக இருக்கின்றார்கள.;
இப்படிப்பட்ட வீரமிகு போராளிகளோடு நேர்மையாக மோதமுடியாத சிங்கள இராணுவமும் அதன் முண்டு சக்திகளும் நாசகார ஆயுதங்களை பயன்படுத்தி எந்த மக்களுக்காக விடுதலைப்புலிகள் போராடினார்களோ அந்த மக்களை கொத்துக்கொத்தாக கொன்றொழித்தார்கள.;
பாடசாலை கோவில் தேவாலயம் மருத்தவமனை என பாதுகாப்புதேடி இருந்த மக்கள் மீதும்
பாதுகாப்பு வலயம் என அறிவித்துவிட்டு ஒன்றாக ஒதுங்கிய மக்கள் மீதும் நாசகாரத்தாக்குதல்கள் சிறீலங்காவின் முப்படைகளாலும் நிகழ்தப்பட்டு ஒவ்வொரு தாக்குதல்களிலும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொன்றொழிக்கப்பட்டதை எப்படி மறக்கமுடியும்?
ஜநா தரவுகளின் அடிப்படையில் 70000 மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் ஜந்து வருடம் கடந்தும் 146.679 பேரை காணவில்லை போரால் கணவன்மார்களை இழந்த 90000 விதவைகள் இருக்கின்றார்கள் இப்படி இருக்கையில் உலகம் இன்னும் போர்க்குற்றமென பேசிக்கொண்டிருக்கின்றது தமிழின அழிப்பு என சொல்ல மறுக்கின்றது என்றால் ஜநா சரத்துக்களின் அடிப்படையில் இனஅழிப்பு நடந்தால் பிரிந்து செல்வதர்கு உரிமை இருக்கின்றது என்பதை நாம் புரிந்து கொண்டு தமிழின அழிப்பிற்கான நீதி கேட்டு தொடர்து போராடுவோம் எங்களின் கனவு பலிக்கும் வரை போராடுவோம்.
வீரத்தோடு நெஞ்சு நிமிர்தி நின்ற இனம் யாருக்கும் அடிபணியவில்லை தங்களின் இலட்சியத்திற்காகவே இறுதிவரை போராடினார்கள். தமிழின வீரத்தின் வராலற்று பொக்கிசம் இவர்கள்  முள்ளிவாய்கால் முடிவல்ல விடுதலைப்போராட்த்தின் அடுத்த பரிமாணத்திற்கான தொடக்கம் என்பதை இன்று உலக மக்கள் வெளிப்படித்தியுள்ளார்கள்.
மே18 தமிழின அழிப்பு நாளின் ஜந்தாவது ஆண்டு நினைவுகளோடு கண்ணிமை உடைந்து காலக்குழந்தையின் பிரசவத்திற்காய் வலிகளை தாங்கி நடக்கின்றோம்.

ad

ad