புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2014


கொழும்பில் இருந்து ஹட்டனுக்கு கடத்தப்பட்ட முஸ்லிம் பெண்  மீட்பு 
Colombo-Girl-01
பாத்திமா நிலுபா உசைன் என்ற பெண்ணையே இவ்வாறு நேற்று 18.05.2014 மாலை 4 மணியளவில் கடத்தி, குறித்த பெண்ணிடம் இருந்த தங்க ஆபரணங்களை அபகரித்து
முகத்தை மறைத்து கைகளை கட்டியதாகவும் ஹட்டன் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கொழும்பு தெம்மட்டகொட பேஸ் லைன் வீதியில் இலக்கம் 40 இல் வசிக்கும் 40 வயதான 3 பிள்ளைகளின் தாயாரை வெள்ளை வானில் கடத்தி கொண்டு வந்து ஹட்டன் வில்பிரட் பிரதேசத்தில் தேயிலை காட்டுப்பகுதியில் கட்டி வைத்ததாகவும் இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பெண் கட்டிய கயிறை கழற்றி குறித்த பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறிய போது மேற்படி வீட்டில் இருந்த உரிமையாளர் 119 என்ற பொலிஸ் அவசர பிரிவுக்கு அழைத்து சம்பவத்தை பற்றி தெரிவித்த பின் ஹட்டன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததாகவும் மேற்படி பெண் தெரிவித்தார்.
பெண்ணின் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதனால் அப்பெண்ணை டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்ததாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கு முன்னர் ஹட்டன் பகுதிக்கு வந்ததில்லையென இப்பெண் தெரிவித்ததாகவும், இவர் கொடுத்த வாக்குமூலத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கும் ஹட்டன் பொலிஸார் இந்த விசாரணைக்கு பெண்ணின் கணவரை ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு வருகைதர வேண்டும் என தெரிவித்ததாகவும் ஹட்டன் பொலிஸர் தெரிவித்தனர்.Colombo-Girl  Colombo-Girl-02 Colombo-Girl-03 Colombo-Girl-04 Colombo-Girl-05 Colombo-Girl-06

ad

ad