புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2014


தமிழ்நாட்டுக்கு மேலும் 2 மந்திரி பதவி?
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பதவி ஏற்ற 45 புதிய மந்திரிகளின் இலாகா விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. மிக சிறிய மந்திரிசபை அமைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் சில மந்திரிக ளுக்கு பல்வேறு துறைகள்
ஒருங்கிணைத்து கொடுக்கப்பட்டுள்ளன.


மூன்று மூத்த காபினெட் மந்திரிகளுக்கு தலா 2 பெரிய இலாகாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது அந்த 3 மந்திரிகளுக்கும் கூடுதல் சுமையாக கருதப்படுகிறது. அதாவது நிதி மந்திரி அருண்ஜேட்லியிடம் கூடுதல் சுமையாக ராணுவ துறை உள்ளது. தொலை தொடர்பு மந்திரி ரவிசங்கர் பிரசாத்திடம் சட்டத்துறை கூடுதாக உள்ளது. தகவல் – ஒலிபரப்பு மந்திரி பிரகாஷ் ஜவதேகரிடம் சுற்றுச்சூழல் கூடுதல் சுமையாக உள்ளது.
பாதுகாப்பு, சட்டம், சுற்றுச்சூழல் ஆகிய மூன்று துறைகளும் மிகவும் முக்கியமான துறைகளாகும். எனவே இந்த துறைகளுக்கு யார் – யாரை நியமனம் செய்வது என்று பிரதமர் மோடி ஆய்வு செய்து வருகிறார். எனவே விரைவில் மத்திய மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படுவது உறுதியாகி விட்டது.
ஜூலை முதல் வாரத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. அதற்கு முன்பு இந்த 3 முக்கிய இலாகாக்களுக்கும் புதிய மந்திரிகள் நியமனம் செய்யப்பட வேண்டியது அவசியமாகும். இதை கருத்தில் கொண்டு இன்னும் 2 வாரங்களில் மத்திய மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் போது தமிழ் நாட்டுக்கு மேலும் 2 மந்திரி பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதில் அன்புமணி ஒருவராக இருப்பார். மற்றொருவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த மூத்ததலைவர்களில் ஒருவராக இருப்பார் என்று தெரிகிறது.
தமிழ்நாட்டில் 2016–ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதை கருத்தில் கொண்டு பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு மந்திரி பதவி வாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ad

ad