புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2014


குஜராத் முதல்வர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் மோடி  
பிரதமராக பொறுப்பேற்க வசதியாக, குஜராத் முதல்வர் பதவியை நரேந்திர மோடி நாளை புதன்கிழமை ராஜிநாமா (மே 21) செய்கிறார்.


தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் காம்லா பெனிவாலிடம் அளிப்பதற்கு முன்பு, சட்டப்பேரவையில் நடைபெறும் சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி உரையாற்றவுள்ளார். அப்போது, அவருக்கு குஜராத் சட்டப் பேரவை உறுப்பினர்கள் பிரியா விடை விருந்து அளிக்கின்றனர்.இதுகுறித்து குஜராத் மாநில பாஜக செய்தி தொடர்பாளர் ஹர்சத் படேல் தெரிவிக்கையில், "குஜராத் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வ தற்கான கடிதத்தை புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் அவர் (மோடி) அளிக்கிறார்' என்றார்.
பின்னர் அந்த மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் மோடி கலந்து கொள்கிறார். இந்தக் கூட்டத்தில், மோடிக்கு பிறகு குஜராத் முதல்வராக பதவியேற்க இருப்பவர் தேர்வு செய்யப்பட உள்ளார். அதனைத் தொடர்ந்து குஜராத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் குழுவுடன் சென்று ஆளுநரை மோடி சந்திக்கிறார். பிறகு குஜராத் பேரவை சபாநாயகர் வஜூபாய் வாலாவை சந்தித்து எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை மோடி அளிக்கிறார்.

ad

ad