புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2014

ராணுவத்துக்கு காணி கோரிய 22 விண்ணப்பங்கள் நிராகரிப்பு; முதலமைச்சர் தெரிவிப்பு
காணிகளை வழங்குமாறு கோரி இராணுவத்தினர் சமர்ப்பித்த 22 விண்ணப்பங்களைத் தான் நிராகரித்துவிட்டதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்
, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்றுத் தெரிவித்தார்.
 
காணிகள் சுவீகரிப்புத் தொடர்பிலான விவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமையச் சுவீகரிப்பு அறிவித்தல்கள் இங்கு ஒட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாகாண சபைக்கும் காணி தொடர்பிலான அதிகாரங்கள் இருக்கின்றமையால் இந்த விடயங்கள் குறித்து அதற்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
 
இதன் போது பதிலளித்த இணைத் தலைவர்களுள் ஒருவராகிய வடக்கு மாகாண முதலமைச் சர் க.வி.விக்னேஸ்வரன், இராணுவத்தினர் அரச காணிகளைத் தமக்குத் தருமாறு கோரி எனக்கு விண்ணப்பங்கள் அனுப்பியிருந்தனர்.22 விண்ணப்பங்கள் வரை கிடைத்திருந்தன. இராணுவ முகாம் அமைப்பதற்காகவே தேவை என்று அவற்றில் குறிப்பிட்டிருந்தனர். 
 
சகல விண்ணப்பங்களையும் நிராகரித்து அனுப்பிவிட்டேன். சில தினங்களுக்கு முன்னர் தான் அவர்களுக்கு இந்தப் பதிலை வழங்கியுள்ளேன் என்று குறிப்பிட்டார்.                   

ad

ad