புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2014


 ‘கோச்சடையான்’ படம் 23–ந் தேதி உறுதியாக திரைக்கு வரும் : பட நிறுவனம் அறிக்கை

ரஜினிகாந்த் 2 வேடங்களில் நடித்து அவருடைய மகள் சவுந்தர்யா அஸ்வின் டைரக்டு செய்துள்ள படம், ‘கோச்சடையான்.’ இந்த படத்தை ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல்
எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ‘கோச்சடையான்’ படம் வெளியீடு தொடர்பாக மீடியா ஒன் நிறுவனம்  ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ‘‘ரஜினிகாந்த்–தீபிகா படுகோன் நடித்துள்ள ‘கோச்சடையான்’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி, பஞ்சாபி, போஜ்புரி, மராட்டி என 6 இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் 6 மொழிகளில் வெளியிடப்படும் முதல் படம் இதுதான்.
இதில் சரத்குமார், ஜாக்கி ஷராப், ஆதி, நாசர், ஷோபனா, ருக்மணி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம், கடந்த 9–ந்தேதி வெளியாக இருந்தது. தொழில்நுட்ப காரணங்களினால் படம் திரைக்கு வருவதை தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் சில உண்மையற்ற செய்திகள் வெளிவந்திருப்பதாக அறிகிறோம்.

கோச்சடையான் படம் 6 மொழிகளிலும் 2டி வடிவத்தில் தயாராகி, ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் பெறப்பட்டு விட்டது. மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் 3டி வடிவத்தில் தயாரான திரைப்படத்துக்கும் தணிக்கை செய்யப்பட்டு விட்டது.
3டி வடிவத்தில் தயாராக கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டதால்தான் குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட இயலவில்லை.
இதுதவிர, ஏற்கனவே சுமார் 4 ஆயிரம் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், சென்னையில் முன்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்துக்குள் ஒரு லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று விட்டன. அதன்பிறகு மேலும் 2 ஆயிரம் திரையரங்குகள் கோச்சடையான் படத்தை திரையிட முன்வந்துள்ளன.
3டி வடிவத்தில் தயாராவதில் ஏற்பட்ட தாமதத்தினால், கோச்சடையான் படத்தை அனைத்து திரையரங்கு களுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப கால அவகாசம் தேவைப்பட்டது. படம், வருகிற 23–ந் தேதி அன்று வெளியாக தயார் நிலையில் உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம். ஏற்கனவே நாங்கள் அறிவித்தபடி, கோச்சடையான் படம் மே 23–ந் தேதி உறுதியாக வெளியாகும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.’’ என்று கூறப்பட்டு இருக்கிறது

ad

ad