புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2014

சென்னையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது பஞ்சாப் மும்பையில் நடைபெற்று வரும் இரண்டாவது தகுதி வெளியேற்ற சுற்றில் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
news

முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 226 ஓட்டங்களை குவித்தது.


முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர் வீரேந்தர் சேவாக் அதிரடியாக ஆடினார். மறுமுனையில் வோராவும் சென்னை பந்துவீச்சை அடித்து நொறுக்க, அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்த ஜோடி 110 ஓட்டம் எடுத்தபோது, வோரா 34 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.அதன்பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல் 13 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார்.

அதேசமயம் அதிரடியை தொடர்ந்த சேவாக், ஐ.பி.எல். போட்டியில் தனது இரண்டாவது சதத்தை நிறைவு செய்தார். 50 பந்துகளில் 10 பவுண்டரி, 6 சிக்சருடன் இந்த இலக்கை அவர் எட்டினார். இதேபோல் இந்திய வீரர்களில் முரளி விஜயும் இரண்டு சதம் அடித்துள்ளார்.

3-வது விக்கெட்டுக்கு சேவாக்குடன் இணைந்த மில்லரும் சென்னை பந்துவீச்சாளர்களை திணறடித்தார். அணியின் ஸ்கோர் 211 ஆக இருந்தபோது சேவாக், நெஹ்ரா ஓவரில் விக்கெட்டை இழந்தார். அவர் 58 பந்துகளில் 12 பவுண்டரி, 8 சிக்சருடன் 122 ஓட்டங்கள் விளாசினார். அடுத்து களமிறங்கிய பெய்லியை ஒரு ஓட்டங்களில் வெளியேற்றினார் நெஹ்ரா. 38 ஓட்டங்கள் குவித்த மில்லர், துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். கடைசி பந்தில் விர்திமான் சகா (6) ஆட்டமிழந்தார்.

இதனால், 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 226 ஓட்டங்கள் பெற்றது. இதனை அடுத்து 226 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய சென்னை 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா 25 பந்துகளில் 12 பவுண்டரி, 6 சிக்சர் உள்பட 87 ஓட்டங்கள் எடுத்து துரதிஷ்ட வசமாக ரன் அவுட் ஆனார்.

இந்த தொடரில் சென்னையுடன் மோதிய 3 ஆட்டங்களிலும் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் அணியின் இந்த வெற்றியின் மூலம் வரும் ஞாயிற்றுகிழமை கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் பெங்களூருவில் இறுதிபோட்டி விளையாட உள்ளது.

ad

ad