புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2014


இந்திய வீட்டுத்திட்டத்திற்கு 26931 பயணாளிகள் வடக்கில் தெரிவு 
news


கஜானாவிற்கு மாற்றலாகி செல்லவுள்ள யாழ். இந்திய துணைத்தூவர் மகாலிங்கம் ஊடகவியலாளர்களை சந்தித்து இன்றையதினம் கலந்துரையாடினார் அதன் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.





இந்திய அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தியன் வீட்டுத்திட்டத்திற்கு இதுவரை வடக்கு மாகாணத்தில் 26931 பயணாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.இந்திய துணைத்தூதரக தூதுவர் வி. மகாலிங்கம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய வீட்டுத்திட்டத்தில் முதல் 1000 வீடுகள் 5 மாவட்டங்களிலும் உள்ள 25 இடங்களில் கட்டப்பட்டன.

அதனையடுத்து 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் 43 ஆயிரம் வீடுகள் அமைப்பதற்கு இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் இணைந்து கைச்சாத்திடப்பட்டது.

அதன்படி கடந்த முதலாம் திகதி வரைக்கும் 26931 பயணாளிகள் வடக்கில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 11227 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 16654 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

எனினும் மிகவிரைவில் பூர்த்தியாக்கப்படும் என்றும் மகாலிங்கம் மேலும் தெரிவித்தார்.

இந்திய வீட்டுத்திட்டத்திற்கு 26931 பயணாளிகள் வடக்கில் தெரிவு 

ad

ad