புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மே, 2014


உக்ரேனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் 34 பேர் பலி


ஸ்லோவி­யன்ஸ்கில் முன்­னெ­டுக்­கப்­பட்ட இரா­ணுவ நட­வ­டிக்­கை­யொன்றில் குறைந்­தது 34 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

அங்கு உக்­கிர போரொன்று ஏற்­ப­டு­வ­தற்­கான சூழ்­நிலை காணப்­ப­டு­வ­தா­கவும் அந்த பிராந்­தி­யத்­தி­லுள்ள பிர­தான விமான நிலை­ய­மொன்று மூடப்­பட்­டுள்­ள­தா­கவும் அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.
உக்­ரேனில் சிவில் யுத்தம் ஒன்று இடம்­பெ­று­வ­தற்­கான அபாயம் நில­வு­வ­தா­க பிரான்ஸ் ஜனா­தி­பதி பிரான்­கொயிஸ் ஹொலண்ட் எச்­ச­ரித்­துள்ளார்.ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின், முன்னாள் சோவியத் அயல் நாடான உக்­ரேனின் மீது ஆக்­கி­ர­மிப்பை மேற்­கொள்ள தனது படை­யி­ன­ருக்கு எச்­ச­ம­யமும் உத்­த­ர­வி­டலாம் என்ற அச்சம் அதி­க­ரித்­துள்­ளது.
ஸ்லோவியன்ஸ்க் நகரில் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ள ரஷ்ய ஆத­ர­வா­ளர்­க­ளி­டையே நன்கு பயிற்சி பெற்ற 800க்கு மேற்­பட்ட போரா­ளிகள் மறைந்­துள்­ள­தாக உக்­ரே­னிய உள்­துறை அமைச்சர் அர்ஸென் அவகோவ் தெரி­வித்­துள்ளார்.
உக்­ரே­னி­லுள்ள பிரி­வி­னை­வா­தி­க­ளுக்கு ரஷ்யா ஆத­ர­வ­ளித்து வரு­வ­தாக உக்­ரே­னிய அர­சாங்கம் குற்­றஞ்­சாட்டி வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.இந்­நி­லையில் கிழக்கு உக்­ரே­னி­லான பதற்றநிலை உச்ச கட்­டத்தை அடை­வ­தற்கு முன்னர் அதனை தணி­விக்கும் வகையில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது குறித்து ஐரோப்­பிய வெளி­நாட்டு அமைச்­சர்கள் செவ்­வாய்க்­கி­ழமை கூடி ஆராய்ந்­தனர்.

ad

ad