புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2014


அகில இந்திய அளவில் அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ள கட்சிகள்

அகில இந்திய அளவில் பாஜக 348, காங்கிரஸ் 68, அதிமுக 37, திரிணாமுல் காங்கிரஸ் 33, பிஜு ஜனதா தளம் 18, தெலுங்கு தேசம் 13, தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.
விருதுநகர்: அதிமுக முன்னிலை: 3வது இடத்தில் வைகோ

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 65,532 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் ரத்தினவேலு 39,218 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 38,981 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் 5 ஆயிரம் வாக்குகள் பெற்று 4வது இடத்தில் உள்ளார். 

எல்.கே.அத்வானி 1,18,281 வாக்குகள் முன்னிலை
குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதயில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி போட்டியிட்டார். 11.30 மணி நிலவரப்படி அவர் 1,18,281 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
2 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ராகுல்காந்தி முன்னிலை
காங்கிரஸ் கட்சி 40,927 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 2,678 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளது.
2 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். காலை 11.12 மணி நிலவரப்படி 21,425 வாக்குகள் பெற்று அவர் 2 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் ஸ்மிருதி ராணி 19,246 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி 4,960 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 1,113 வாக்குகள் பெற்றுள்ளார்.

ad

ad