புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2014



லமான கைதட்டல்களும், பாரத் மாதா கீ ஜே என்ற முழக்கத்துடனும் ராஷ்ட்ரபதி பவன் வளாகத்தில் சுமார் 4000 பேர் திரண்டிருக்க, 2104 மே 26 மாலை 6.12 மணிக்கு இந்தியாவின் 15வது பிரதமராகப் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார் நரேந்திர தாமோதரதாஸ் மோடி. கைதட்டலும் முழக்கமும் பெருமளவில் இருந்ததால், பா.ஜ.கவின் உயர்மட்டத்தினர் விட்ட நிம்மதிப் பெருமூச்சின் சத்தம் வெளியில் கேட்கவில்லை.

""ரொம்பவும் பதட்டத்துடன் இருந்தோம்'' என்று நம்மிடம் சொன்ன பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங்கின் செகரட்டரிகள், ""ஏராளமான மிரட்டல்கள் வந்தபடியே இருந்தன. எவ்வித அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்ற பதட்டத்தால் லப்டப் எகிறியபடியே இருந்தது. பதவியேற்பு நல்லபடியாக முடியவேண்டும் என்று எல்லா இந்துக்கடவுள்களையும் வேண்டிக்கொண்டோம். 

இன்று உலகத்தில் ஒபாமாவுக்கு அடுத்தபடியாக அதிக மிரட்டல்களை எதிர்கொள்பவர் மோடிதான். அதனால்தான் பதறியபடி இருந்தோம். நல்லவேளை.. எல்லா மிரட்டல்களையும் தாண்டி மோடி பிரதமராகிவிட்டார்'' என்றபடி பெருமூச்சு விட்டனர். பிரதமர் என்ற அந்தஸ்துடன் மோடியின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப் படும் என்பதால் பதட்டப்பட வேண்டியதில்லை என்றும் கவனம் மட்டுமே தேவை என்றும் அவர்கள் சொன்னார்கள்.

பெரும் வெற்றி- சின்ன அர சாங்கம் என்பதாக அமைந்திருக்கிறது பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 77 அமைச்சர்கள் இருந்தார்கள். மோடியின் அமைச்சரவையில் 44 பேர்தான். 23 கேபினட் அமைச்சர்கள், 10 தனிப்பொறுப்பு அமைச்சர்கள், 11 இணையமைச்சர்கள் என்பதுதான் இந்தியாவின் புதிய அமைச்சரவை. குறைந்த மந்திரிகள்- நிறைந்த நிர்வாகம் என்பதுதான் மோடியின் ஃபார்முலா என்று பெருமிதப்பட்டுக் கொள்கிறார்கள் டெல்லியில் நம்மிடம் பேசிய பா.ஜ.க நிர் வாகிகள். 

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க மோடி யும் அவரது அமைச் சரவை சகாக்களும் வரிசையாக உறுதி மொழி ஏற்றனர். 

முன்னாள் ஜனாதி பதிகள் அப்துல்கலாம், பிரதிபா பாட்டீல், முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா, மன் மோகன்சிங், காங் கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல்காந்தி உள்பட பலரும் வருகை தந்த நிலை யில், சார்க் நாடுகளின் தலைவர்கள் என்ற முறையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஆப்கானிஸ்தானின் கர்சாய், தமிழகத்தின் ஒட்டு மொத்த எதிர்ப்பை மீறி வரவேற்கப்பட்ட இலங்கை அதிபர் ராஜபக்சே உள்பட வெளிநாட்டுத் தலைவர் களும் முன்வரிசையில் உட்காரவைக்கப்பட்டனர். தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி-அனில் அம்பானி ஆகியோர் குடும்பத்துடன் வந்திருந்தனர். திரையுலகப் பிரபலங்கள், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் உள்ளிட்ட சாமியார்களும் முக்கியத்துவம் பெற்றிருந்தனர்.

 நரேந்திர மோடியின் அமைச்சரவையில் 75 வயதுக்குட் பட்டவர்களுக்கே இடமளிக்கப் பட்டுள்ளது. 70 வயதுக்கு குறைவான வர்களை மட்டுமே அமைச்சராக்குவது என்று மோடி திட்டமிட்டிருந்தார். எனினும், 73 வயதாகும் நஜ்மா ஹெப்துல்லாவுக்கு அமைச்சர் பதவி தரவேண்டும் என்பதால் வயது வரம்பை 75ஆக மாற்றியமைத்து, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்களை ஓரமாக உட்காரவைத்துவிட்டார் மோடி. அமைச்சரவைப் பட்டியலில் யார் யார் இடம்பெற்றுள்ளனர், அவர்களுக்கு என்ன இலாகா என்ற விவரங்கள் ஜனாதிபதி மாளிகைக்குச் செல்லும்வரை வெளியாகவில்லை. ரகசியத்தைக் காப்பதில் மோடி டீம் கறாராக இருந்ததால், ஊடகங்களில் யூகப் பட்டியல்கள் மட்டுமே வெளியாகின. 

ஆர்.எஸ்.எஸ்.ஸின் தலையீடுகள் இருந்தபோதும், அதனை லாவகமாகக் கையாண்டு தன் விருப்பத் திற்கேற்ற வகையில் அமைச்சரவையை உருவாக்கிவிட்டார் மோடி என்று அவரது வட்டாரத்தினர் பெருமைப் படுகிறார்கள். கட்சித் தலைவரும் சீனியருமான ராஜ்நாத்சிங்கிற்கு உள்துறை கொடுத்து அமைச்சரவையில் முக்கியத்துவம் தந்தபோதும், உளவுத் துறையை பிரதமரே வைத்துக்கொள்வது என்கிற மோடியின் முடிவு இன்னமும் மாறவில்லை என்கிறார்கள் அவரது வட்டாரத்தினர். இதுகுறித்து தெளிவுபடுத்தாமல்தான் ராஜ்நாத் சிங்கிடம் உள்துறையைத் தந்திருக்கிறாராம்.

தனது நம்பிக்கைக்குரியவரான அருண்ஜெட்லிக்கு நிதித்துறையைத் தந்திருப்பதுடன் கூடுதலாக பாது காப்புத்துறையையும் அளித்திருக்கிறார் மோடி. அத்துடன் ஐ.பி, ரா போன்றவற்றின் செயல்பாடுகள், நாட்டின் பாதுகாப்பு இவை குறித்து ஆய்வு செய்ய பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டியும் அமைக்கப் பட்டுள்ளது. முக்கியத் துறைகளுக்கு வேறு யாரையும் நம்பாமல் தன் வசமும் தனக்கு விசுவாசமாக உள்ளவர்களை மட்டுமே பிரதமர் நம்புகிறார் என்ற பேச்சு இப்போதே சவுத் ப்ளாக்கில் கேட்கிறது. 

சுஷ்மா ஸ்வராஜ் தனக்குரிய முக்கியத்துவம் எப்படி அளிக்கப்படுகிறது என்று எதிர்பார்த்திருந்தார். அவருக்கு வெளியுறவுத்துறை அளிக்கப்பட்டுள்ளது. டாப் 5 துறைகளில் இதுவும் ஒன்று என்பதால் அவர் ஓரளவு திருப்தியடைந்துள்ளார். அதேநேரத்தில் மோடி வட்டாரமோ, உள்நாட்டில் பணியாற்ற வேண்டிய துறை களை சுஷ்மாவிற்கு ஒதுக்கியிருந்தால் அவர் தனது ஆதரவாளர்களை அணி திரட்டி விடுவார். அதனால்தான் அவரை அடிக்கடி வெளிநாட்டு டூரில் இருக்கும்படியான துறைக்கு மோடி ஒதுக்கிவிட்டார் என்கிறது.

தனிப்பெரும்பான்மை பெற்றிருந்த போது, கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் சில இடங்களை அளித் திருக்கிறது பா.ஜ.க. தெலுங்கு தேசத்திற்கு 2 கேபினட் கேட்டார் சந்திரபாபுநாயுடு. ஒரு பதவி மட்டும் கொடுத்து, விரிவாக்கத்தின் போது பார்த்துக்கொள்ளலாம் என்றிருக்கிறார் மோடி. கூட்டணித் தலைவர்களில் ஒருவரான ராம்விலாஸ்பாஸ்வான் மீண்டும் மத்திய அமைச்சராகியிருக்கிறார். 

அகாலிதளத்திற்கும் இடமளிக்கப் பட்டுள்ளது. ரொம்பவும் எதிர்பார்த்திருந்த பா.ம.கவுக்கு அமைச்சர் பதவி இல்லை. சி.பி.ஐ வழக்கிலிருந்து விடுபட்டதும், விரிவாக் கத்தின்போது அன்புமணிக்கு பதவி கிடைக்கும் என்கிறார்கள் பா.ம.கவினர். ஆனால், தமிழகத்தில் கூட்டணி மீதான அதிருப்தியை ஏற்படுத்தியதே பா.ம.க தலைமையின் செயல்பாடுதான் என்று பா.ஜ.க நினைப்ப தாலும், அன்புமணி மீதான புகார்களும்தான் பதவி மறுப்புக்குக் காரணம் என்கிறார்கள் பா.ஜ.கவினர்.

தமிழகத்தின் சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மட்டும் இணையமைச்சர்  பதவி வழங்கப்பட்டுள்ளது. 1996 முதல் மத்திய அமைச்சரவையில் முக்கியத்துவம் பெற்றிருந்த தமிழகம் இம்முறை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க தலைமையிலான அணிக்காக பெரும் முயற்சி எடுத்த பொன்.ராதாவுக்கு ஒரு கேபினட் கொடுத்திருக்கலாம் என்றனர் பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த தமிழக பா.ஜ.கவினர் ஆதங்கத்தோடு. 

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பதவியேற்பு நாளில் டெல்லியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி கைதான வைகோவுக்கு போராட்டக்காரர் என்ற பெயர் பா.ஜ.க தரப்பிலிருந்தே கிடைத்துள்ளது. அழைத்த மோடியை விட்டு, வந்த ராஜபக்சேவுக்கு மட்டும் கருப்புக்கொடியா என்ற குரல்களும் கேட்டன. குடும்பத்துடன் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், எப்படியும் சுதீஷை நியமன எம்.பியாக்கி, அடுத்த விரிவாக்கத்தில் அமைச்சர் பதவி தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஏ.சி. சண்முகம், பாரிவேந்தர், ஈஸ்வரன் ஆகியோரும் டெல்லிக்கு வந்து தங்கள் வருகையை பதிவு செய்தனர். 

தமிழகத்திற்கு இம்முறை சரியான பிரதிநிதித்துவம் இல்லை என்றாலும் விரைவில் நிலைமைகள் மாறும் என்கிற டெல்லி பா.ஜ.கவினர், பெங்களூரு வழக்கு ஜெ.வுக்கும் 2ஜி வழக்கு தி.மு.கவுக்கும் எதிராக அமைந்து இரண்டு கட்சிகளின் எதிர்காலத்திற்கும் சவாலாக அமையும். அப்போது பா.ஜ.கவும் அதன் கூட்டணிக்கட்சிகளும் வலுப்பெறும். அதனால்தான் சட்டமன்றத் தேர்தலிலும் தமிழகத்தில் அமைந்துள்ள பா.ஜ.க கூட்டணி தொடரவேண்டும் என மோடி விரும்புகிறார். கர்நாடகத்தைப்போல தமிழகத்திலும் பா.ஜ.க விரைவில் முத்திரை பதிக்கும் என்ற நம்பிக்கையை மோடி எங்களுக்குத் தந்திருக்கிறார். அதனால் தமிழகத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்கிறார்கள். 

அமைச்சரவையைத் தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்  என்ற மோடியின் எண்ணம் நிறைவேறி யிருப்பதை கட்சியில் அவருக்குப் போட்டியாக உள்ளவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். ஓப்பனிங் நல்லாத்தான் இருக்குது என்றும் அவர்கள் சொல்கிறார்கள் நம்பிக்கை யுடன்.

ad

ad