புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2014


எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சி பெற எந்தவித சட்ட சிக்கலும் இல்லை: வீரப்ப மொய்லி
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. குறைந்தபட்சம் 55 தொகுதிகளில் வெற்றி பெறாததால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. 



இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான  வீரப்ப மொய்லி,
"மக்களவையில் எதிர்க்கட்சிகளாக உள்ளவர்களில் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி அளிக்கப்பட வேண்டும் என்பது நாடாளுமன்ற சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த சில முறை மக்களவைத் தலைவராக பதவி வகித்தவர்கள், "மக்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு இருக்கும் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து அளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டு அதை பின்பற்றி வந்துள்ளனர்.
இந்த உத்தரவை மக்களவைத் தலைவர் பிறப்பித்த போதிலும் அது நாடாளுமன்ற சட்டமாகாது. தற்போது எழுந்துள்ள இந்தப் பிரச்னைக்கு இந்த குழப்பம்தான் காரணம். எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து பெறுவதற்கு குறைந்தபட்சம் உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற விதிகளில் குறிப்பிடப்படவில்லை. ஆகையால், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சி பெற எந்தவித சட்டச் சிக்கலும் கிடையாது' என்று கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், "நாடாளுமன்ற விதிகளுக்கு உள்பட்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றுக் கருத்து கிடையாது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற நாடாளுமன்ற சட்ட விதிமுறைகள் எதிராக இல்லை' என்று கூறினார்.

ad

ad