புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2014


இறந்த பின்னரும் வாக்கு சீட்டில் இடம்பெற்று வென்று சாதனை படைத்த பெண் 

ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினரான இவர், ஏற்கனவே 4 முறை எம்.எல்.ஏ.வாக இந்த
தொகுதியில் வெற்றி பெற்று 5வது முறையாக போட்டியிட்டார்.
இந்நிலையில், ஏப்ரல் மாதம் 23ம் திகதி இரவு பிரசாரத்தை முடித்து விட்டு காரில் வீடு திரும்பிய போது சாலையில் கார்  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஷோபா நாகி ரெட்டி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறாததாலும் ஓட்டு பதிவு எந்திரத்தில் இவரது பெயர் பொருத்தப்பட்ட காரணத்தினாலும் அள்ளகட்டா தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படவில்லை.
இதனைதொடர்ந்து, தேர்தலில் ஷோபா நாகிரெட்டி வெற்றி பெற வேண்டும் என்று அவரது 2 மகள்களும், மகனும் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தனர்.
சீமாந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் தேர்தலுக்கு முன் இறந்த நிலையிலும் தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்

எங்களது தாயை 4 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெறச் செய்தீர்கள். இறந்த பிறகும் அவரை வெற்றி பெறச் செய்து அவருக்கு பெருமை தேடி தாருங்கள் என்று பிரசாரத்தின் போது அவர்கள் உருக்கமாக பேசினார்கள்.
இந்நிலையில், மகள்களின் பிரசாரத்துக்கு தேர்தலில் நல்ல பலன் கிடைத்துள்ளது.
நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையின் போது வேட்பாளர் ஷோபா நாகி ரெட்டி 92,108 ஓட்டுகள் பெற்று, சுமார் 18 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தெலுங்கு தேச வேட்பாளர் பிரபாகர்ராவை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் மரணத்துக்கு பிறகும் வெற்றி பெற்று சாதனை படைத்த பெண் என்ற பெருமையை ஷோபா நாகிரெட்டி பெற்றுள்ளார்.
மேலும், ஷோபா நாகி ரெட்டி வெற்றி பெற்றால் அந்த தொகுதியில் மறுதேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன்படி 6 மாதத்துக்குள் அள்ளகட்டா தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ad

ad