புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மே, 2014

அதிகாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணும் ஆயத்த பணி துவங்கும்;
காலை 8.30 மணிக்கு முதல்கட்ட நிலவரம்!
மக்களவை தேர்தலுக்காக 9 கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ளன.  நாளை மறுநாள் 16ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.


இது குறித்து தேர்தல் ஆணையம், ‘’மக்களவை தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி மே 16ம் தேதி காலை 8 மணிக்கு துவங்க உள்ளது. முதலில் தபால் ஓட்டுக்களும், பின்னர் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்களும் எண்ணப்பட உள்ளன. 
ஓட்டுக்கள் எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் அதிகாலை 5 மணிக்கு துவங்கி விடும். மாவட்ட தேர்தல் அதிகாரி, கண்காணிப்பு குழுவினர் உள்ளிட்டோர் முன்னிலையில் ஓட்டுக்கள் எண்ணம் பணி நடைபெறும். காலை 6 மணிக்கு, தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஓட்டு எண்ணும் பணியில் இருக்கும் அதிகாரிகள் பற்றிய பட்டியல் தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்படும். 
ஓட்டு எண்ணும் ஊழியர், ஓட்டும் மேஜைக்கு வந்த பிறகு ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை வெளியே அனுமதி கிடையாது. தவிர்க்க முடியாத காரணங்கள் ஏற்பட்டால், மாவட்ட தேர்தல் அதிகாரி அல்லது தேர்தல் தலைமை அதிகாரியிடம் அனுமதி பெற்று அவர்கள் மாற்று ஏற்பாடு செய்த பிறகே வெளியே அனுமதிக்கப்படுவார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், ஓட்டு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படலாம். ஆனால் அவரது பாதுகாப்பு வீரர்களுக்கு அனுமதி கிடையாது. ஒரு மேஜைக்கு வேட்பாளரின் ஒரு ஏஜெண்ட் மட்டுமே அனுமதிக்கப்படுவார். ஒவ்வொரு மேஜையிலும் ஒரு கண்காணிப்பு கேமிரா பொறுத்தப்படும். ஒரு சுற்றின் போது ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மட்டுமே எண்ணுவதற்காக ஒரு மேஜையில் அனுமதிக்கப்படும்.

முதல் சுற்று முடிவடைந்த பின்னரே அடுத்த இயந்திரம் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஓட்டு எண்ணுவதற்கு முன் இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் சரியாக உள்ளதா என சரிபார்க்கப்படும். 
ஒவ்வொரு சுற்று முடிவுகளும் ஓட்டு எண்ணும் மைய கண்காணிப்பாளரால் வெளியிடப்படும். பின்னர் ஏஜண்டுகளிடம் தெரிவிக்கப்படும். ஒவ்வொரு வேட்பாளரும் ஓட்டுச்சாவடி வாரியாக பெற்றுள்ள ஓட்டுக்களின் நிலவரம் எழுத்து பூர்வமாக தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்படும். 
இந்த பட்டியல் வேட்பாளர் அல்லது அவரின் ஏஜண்ட் மூலம் சரிபார்க்கப்படும். ஓட்டு எண்ணும் பணியின் ஒவ்வொரு நிகழ்வையும் தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர்கள் தீவிரமாக கண்காணிப் பர். பெரும்பாலான தொகுதிகளில் முடிவுகள் மாலை 3 முதல் 4 மணிக்குள் வெளியாகும்’’என்று தெரிவித்துள்ளது.

ad

ad