புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2014

யாழ்ப்பாணம் அரியாலை அருணோதயா சனசமூக நிலையத்தின் 54வது ஆண்டு விழா-பா.உ.ஸ்ரீதரன் பிரதம விருந்தினர் 
யாழ்ப்பாணம் அரியாலை அருணோதயா சனசமூக நிலையத்தின் 54வது ஆண்டு விழா கடந்த 13ம், 14ம் நாட்களில் அரியாலையில் சனசமுக நிலையத்தின் தலைவர் த.பிரதீபன் தலைமையில்
நடைபெற்றது.

இதில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், சிறப்பு விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் மே.என்.விந்தன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேற்படி அருணோதயா சனசமூக நிலையத்தின் 54ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி பல்வேறு விளையாட்டு கலை கலாசார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அமரர் சின்னத்தம்பி ஆனந்தசுந்தரம் ஞாபகார்த்தமாக அவரது மகன் விஜயனின் அனுசணையில், மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி நடாத்தப்பட்டது.
அத்துடன் முன்பள்ளி விளையாட்டுப் போட்டிகளும் பேச்சு, கட்டுரை, பொது அறிவு, பாப்பாமலர் போட்டிகளும் உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் மற்றும் கரப்பந்து போட்டிகளும் பாரம்பரிய போட்டிகளும் நடாத்தப்பட்டு பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கி மதிப்பளிக்கபட்டுள்ளன.
இங்கு உரையாற்றிய பா.உறுப்பினர் சி.சிறீதரன்,
அரியாலை அருணோதயா சனசமூக நிலையத்தின் இந்த ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வதையிட்டு, மகிழ்ச்சி அடைகின்றேன். இத்தகைய ஊரின் ஆற்றல்களை அடையாளங்களை மேம்படுத்தும் நிகழ்வுகள் மதிக்கத்தக்கவை.
பிறநாடுகளில் இத்தகைய உள்ளுர் அமைப்புக்கள் மிகவும் தீர்மானிக்கக்கூடிய சக்திமிக்கதாக திகழ்வதை அறிகின்றோம்.கிராமங்களின் எழுச்சியும் வல்லமையும்தான் மாவட்டத்தின் இருப்பை அதன் எதிர்கால அடையாளத்தை வடிவமைக்க வல்லதாக மாறுகின்றன.
இத்தகைய பாரம்பரியம் மிக்க கிராமங்களில் பிரமாண்டமான எமது அடையாளங்களுடன் கூடிய நமது கிராமத்து மக்களால் நடாத்தப்படும் கலை கலாசார விளையாட்டு நிகழ்வுகள் ஒரு மண்வாசம்மிக்க மனபடிமத்தை வளர்த்துச்செல்கின்றது.
நாம் வீழ்த்தப்பட்டதாக ஆக்கிரமிப்பாளர்கள் எக்காளமிடுகின்ற இந்த நாட்களில் நாம் பல உறவுகளில் நினைவுகளில் மூழ்கி இருக்கின்றோம்.
எமது கலைகளில் ஏற்றிப்பபோற்ற வேண்டிய நினைவுளை வெளிக்காட்ட முடியாமல் விம்மி நிற்கின்றோம். இந்த சேதிகளை பகிர்ந்து கொள்ளவும் இந்த சன சமூகநிலையத்தின் அரங்கு தர்மத்தின் கட்டளையாக திறந்திருப்பது திருப்தி தருகின்றது என்றார்.

ad

ad