புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2014


தேர்தல் பணியில் பலியான அதிமுக நிர்வாகி: நிதி உதவியை பெற மறுத்த மகள்: அதிர்ச்சியான அமைச்சர்
                     
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் ஊராட்சி கழுவங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பொன்முடி (59). இவர் ஊராட்சி செயலாளராக இருந்து வருகிறார்.
இவருக்கு பேபி (50) என்ற மனைவியும் ஆசை தம்பி (34) என்ற மகனும், சிற்றரசி (29) என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அ.தி.மு.கவின் தீவிர தொண்டரான இவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் பணியாற்றிக் கொண்டிருந்த  போது பம்பரமாக சுழன்று பணியாற்றினார். கடந்த ஏப்-21ம் தேதி நமச்சிக்காடு அருகே கடும் வெயிலில் மயங்கி விழுந்து பலியானார்.

இந்த நிலையில் பொன்முடி மறைவுக்கு அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் யாரும்; வரவில்லை. பொன்முடி இறந்த சம்பவத்தை ஜெயலலிதாவுக்கும், தலைமை நிர்வாகிகளுக்கும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து ஜெயலலிதா இரங்களும் தெரிவிக்கவில்லை.
    
இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் கடந்த 8-ம் தேதி பொன்முடியின் படத்திறப்பு விழா நிகழ்ச்சிக்கு அமைச்சர் காமராஜ் பெயரை போட்டு பத்திரிக்கை அடித்தனர். ஆனால் அமைச்சர் வரவில்லை. இது பொன்முடி குடும்பத்தினரை வருத்தப்பட வைத்தது. இந்த நிலையில் அ.தி.மு.க நிர்வாகிகளிடம் ஏன் பொன்முடி இறந்த சம்பவத்தை ஜெயலலிதாவிடம் தெரிவிக்கவில்லை? அவரின் மரணத்தை ஏன் நீங்கள் புறக்கணித்தீங்க? என்று குடும்பத்தினர் கேட்ட போது கட்சியினர் முறையாக பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் நேற்று திடீர் என்று பொன்முடி வீட்டுக்கு அமைச்சர் காமராஜ் சென்றார்.
அப்பொழுது மனைவி பேபி, மகன் ஆசை தம்பி, மகள் சிற்றரசி ஆகியோருக்கு ஆறுதல் கூறிய காமராஜ் 1 லட்சம் பணத்தை நிதி உதவியாக வழங்கிய போது அவர்கள் வாங்க மறுத்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் காமராஜ் மீண்டும் கொடுக்க முயன்ற போது பொன்முடியின் மகள் சிற்றரசி “கட்சிக்காக உழைத்த எங்க அப்பாவின் மரணத்தை ஏன் ஜெயலலிதாவிடம் தெரிவிக்க வில்லை? அவங்க ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை?” என சரமாரியாக கேள்விகள் கேட்டார். 
அதற்கு, காமராஜ் தேர்தல் நேரம் என்பதால் தகவல் கூற முடியவில்லை என்று பதில் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த சிற்றரசி “எங்க அப்பா தேர்தல் வேலை பார்த்தபோது தான் இறந்து போனாங்க அதனால் எங்களுக்கு பணம் வேண்டாம்  பணத்தை எடுத்துக்கிட்டு போங்க, முதல்வர் இரங்கல் தெரிவித்து இருந்தால் அதற்கு விலை மதிக்க முடியாது” என்று கோபமாக பேசினார். இதனால் மீண்டும் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் காமராஜ் முகம் சுறுங்கி திரும்பி சென்றார். இது அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பானது

ad

ad