புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2014

அரவிந்தர் ஆசிரமத்தைவிட்டு வெளியேற5 சகோதரிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் ஜெயஸ்ரீ பிரசாத், அருணஸ்ரீ பிரசாத், ராஜ்யஸ்ரீ பிரசாத், நிவேதிதா பிரசாத், ஹேமலதா பிரசாத் ஆகியோர் தங்கியிருந்தனர். கடந்த 2002-ஆம் ஆண்டு
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு பரிந்துரையின் பேரில், ஹேமலதா பிரசாத் மீது பல்வேறு புகார்களைக் கூறி, ஆசிரம நிர்வாகம் 5 சகோதரிகளையும் வெளியேறுமாறு கூறியது.

ஆனால், அவர்கள் ஆசிரமத்தை விட்டு வெளியேறாமல் ஆசிரம நிர்வாகத்தினர் மீது பாலியல் புகார் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறினர். தேசிய மகளிர் ஆணைய தலைவர் பூர்ணிமா அத்வானி புதுவை வந்தபோது அவரிடமும் சகோதரிகள் புகார் செய்தனர். தேசிய மகளிர் ஆணையம், தேசிய மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்டவை செய்த விசாரணையில் சகோதரிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகள் பொய்யானவை, திட்டமிட்டு கூறியது எனத் தெரியவந்தது.
இதையடுத்து, ஹேமலதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆசிரமத்தை விட்டு வெளியேற வேண்டும் என சகோதரிகளுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, அவரது சகோதரி ஜெயஸ்ரீ பிரசாத் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுதான்சு ஜோதி முகோபத்யா, ரஞ்சன் கோகோய் ஆகியோர் கொண்ட அமர்வு, வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் 5 சகோதரிகளும் ஆசிரமத்தை விட்டு வெளியேற வேண்டும்.
அதுவரை ஆசிரம நிர்வாகத்தின் விதிகளை கடைபிடிக்க வேண்டும். அவர்கள் வெளியேறவில்லை என்றால் ஆசிரம நிர்வாகம் நீதிமன்ற அவதமதிப்பு வழக்கை தொடரலாம் என தீர்ப்பளித்தனர்.
புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் ஜெயஸ்ரீ பிரசாத், அருணஸ்ரீ பிரசாத், ராஜ்யஸ்ரீ பிரசாத்,நிவேதிதா பிரசாத், ஹேமலதா பிரசாத் ஆகியோர் தங்கியிருந்தனர். கடந்த 2002-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு பரிந்துரையின் பேரில், ஹேமலதா பிரசாத் மீது பல்வேறு புகார்களைக் கூறி, ஆசிரம நிர்வாகம் 5 சகோதரிகளையும் வெளியேறுமாறு கூறியது.

ad

ad