புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2014



பலத்த தடைகளுக்கு மத்தியில் மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் 5வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு காரியாலயத்தில்
இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் உப தலைவருமான திரு பொன் செல்வராசா அவர்களின் தலமையின் கீழ் இடம்பெற்ற இந்த நினைவஞ்சலி வணக்க நிகழ்வில்,
பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை), துரைராசசிங்கம், இரா. துரைரெட்ணம், நடராசா அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் எங்காவது அனுஷ்டிக்கப்பட்டால் அதை உடன் தடை செய்வதில் இராணுவத்தினரும், புலனாய்வு பிரிவினரும், பொலிஸாரும் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வுகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்படியாவது நடாத்தும் என்ற சந்தேகம் இராணுவத்திற்கும், புலனாய்வு பிரிவுக்கும், பொலிஸாருக்கும் ஏற்பட்டிருந்ததனால் கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு பொது மக்களை பயன்படுத்தி பொது இடங்களில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் இருவரும் நடாத்த முற்படுவார்கள் என்ற சந்தேகத்தில் இவ் இருவருக்கும் எதிராக பொது இடங்களில் பொது மக்களை பயன்படுத்தி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நடாத்துவதை தடை செய்யும் முகமான தடை உத்தரவை மட்டக்களப்பு நீதி மன்றத்திலிருந்து பெற்றிருந்தனர்.
ஆனாலும் 18ம் திகதி இன்று பாராளுமன்ற உறுப்பினர் வீடுகளுக்கு காலை வேளையிலே பொலிஸார் சென்று இவ் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை பொதுமக்களை ஒன்று கூட்டி பொது இடங்களில் மேற்கொள்ள வேண்டாம் என தமது கருத்தை தெரிவித்துள்ளனர்.
இவ்வேளை இதற்கான நீதிமன்ற தடை உத்தரவுப் பத்திரத்தை வழங்கவில்லை. 
இவ்வேளை இன்று காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ஒன்று கூடி தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் ஐந்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தி நினைவுப் பேருரை வழங்கியுள்ளனர்.
ஐந்து வருடங்களுக்கு முன் நடாத்தப்பட்ட தமிழின படுகொலைக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் இந்த அரசாங்கம் இடமளிக்காத நிலையில் இவ் அராசாங்கம் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து புரிந்து கொண்டிருக்கின்றது என தமிழ் மக்கள் மிகக் கவலை தெரிவிக்கின்றனர்.
யோகேஸ்வரன் எம்.பியின் அலவலகத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு பூஜை வழிபாடு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தனது அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு முள்ளிவாய்காலில் உயிர் நீத்த தமிழ் உறவுகளுக்கு விசேட பூசைகளை மேற்கொண்டு அஞ்சலி செலுத்தினார்.
தனது அலுவலகத்தில் இப்பூசை நிகழ்வுகள் ஆத்ம சாந்தி வேண்டுதலுடன் நடைபெற்றது. அதன் பின் முள்ளிவாய்காலில் உயிர் நீத்த தமிழ் உறவுகளின் கனவுகள் நனவாக வேண்டும் என அன்னை பத்திரகாளி தேவியை பிரார்த்தனை செய்தார்.
அவர்களின் ஆத்மா சாந்திக்காக இறைவனை வேண்டி பிராத்தனையிலும் ஈடுபட்டார். இதன்போது ஐந்தாவது வருட முள்ளிவாய்காலில் நினைவு கூறும் முகமாக ஐந்து விளக்கினை ஏற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 2010ம் ஆண்டும் முள்ளிவாய்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய திருக்குளத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரால் மாபெரும் ஆத்ம சாந்தி கிரியை நடாத்தப்பட்டது.
இலங்கையிலோ அல்லது உலகிலோ 2009ம் ஆண்டு முள்ளிவாய்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு பிண்டங்கள் இட்டு எள்ளுத் தண்ணி இறைத்து முதலில் கிரியை நடாத்தப்பட்டது மட்டக்களப்பு மாவட்டத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad