புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மே, 2014

 8 வது கட்ட தேர்தல்: மேற்குவங்கத்தில் 73 சதவீதம்; பீகார் 47%, சீமாந்திரா 51%
அமேதி உள்பட 64 தொகுதிகளில், நாடாளுமன்றத்திற்கான 8வது கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3 மணிவரை மேற்குவங்கத்தில் 73
சதவீதம் வரை வாக்குகள் பதிவாகி உள்ளது. சீமாந்திராவில் 51 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

நாடாளுமன்றத்தில் உள்ள 543 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கி, வரும் 12 ஆம் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 7 கட்டங்களாக 438 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், 8வது கட்டமாக ஆந்திரம்-25, பீகார்-7, இமாச்சலப் பிரதேசம்-4, ஜம்மு காஷ்மீர்-2, உத்தரப்பிரதேசம்-15, உத்தரகாண்ட்-5, மேற்கு வங்கம்-6 என 7 மாநிலங்களில் உள்ள 64 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் 18 கோடியே 47 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தலில் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் என மொத்தம் 1,737 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி (அமேதி), பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இரானி (அமேதி), வருண் காந்தி (சுல்தான்பூர்), மத்திய அமைச்சர்கள் வேணி பிரசாத் வர்மா (கோண்டா), கிஷோர் சந்திர தேவ் (அராகு), பல்லம் ராஜு (காகிநாடா), கிரிக்கெட் வீரர் முகம்மது கைஃப் (புல்பூர்), லோக் ஜன சக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் (ஹாஜிபூர்), ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவி, பா.ஜ.க. மூத்த தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடி (இருவரும் சரண் தொகுதியில் போட்டி) ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள்.

இதேபோல், ஆந்திர மாநிலம் சீமாந்திராவில் உள்ள 25 நாடாளுமன்றத் தொகுதிகள், 175 சட்டப்பேரவைத் தொகுதி
களுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பிற்பகல் 3 மணிவரை மேற்குவங்கத்தில் 73 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று பீகாரில் 47 சதவீதமும், சீமாந்திராவில் பகல் 1 மணிவரை 51 சதவீதமும் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் பகல் 1 மணி வரை 37 சதவீதம் வரை வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் சில இடங்கள் வன்முறை நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன

ad

ad