புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2014

திமுக இளைஞரணி கூட்டம் : 8 தீர்மானங்கள்
தி.மு.க இளைஞர் அணி மாநகர, மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் இன்று நடந்தது. தி.மு.க. பொருளாளரும் இளைஞர் அணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் மா.சுப்பிரமணியம், ஈஜி.சுகவனம், ராஜேந்திரன், சம்பத், சந்திரசேகர், அசன்முகமது ஜின்னா, செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 8 தீர்மானங்கள் விவரம் :
 தமிழ் இனம் காக்க–தமிழ் மொழி காக்க தன்னலம் கருதாது தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு, நாளும் ஓய்வின்றி உழைத்து வரும் நம் ஒப்பற்ற தலைவர் கருணாநிதியின் 91வது பிறந்த நாள்; வரும் ஜுன் 3.
இந்த இனிய நாளில் தமிழகமே விழாக்கோலம் பூணுகின்ற வகையில் தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் நகரங்கள், மாநகரங்கள், கிராமங்கள், குக்கிராமங்கள், வார்டுகள் தோறும் வீதிக்கு வீதி கொடி, தோரணங்களை கட்டியும், ஒலிபெருக்கி அமைத்து கழகக் கொள்கைப் பாடல்களை ஒலிபரப்பச் செய்வதோடு, கழகக் கொடியேற்று நிகழ்ச்சிகளையும் அமைத்து, ஏழை, எளியோர்க்கு அறுசுவை உணவினையும், புத்தாடைகளையும் வழங்கி எழுச்சியோடு கொண்டாடிட வேண்டும்.

'
ஒரு மாத காலத்திற்கு தலைவரின் சிறப்புக்களை விளக்கி கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சி போன்றவற்றையும் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்து அதன் வாயிலாக மக்கள் நலத் திட்டங்களை வழங்கிட வேண்டும்.
ஆதரவற்றோர் - முதியோர் இல்லங்களில் வசிப்போர்க்கு உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்வதோடு, ஏழை, எளியோர், நடுத்தர மக்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்றாற்போல் கிராமப் புறங்களில் இலவச மருத்துவ முகாம்களையும், இரத்ததான முகாம்–கண்தான முகாம் போன்ற சிறப்பு முகாம்களையும் ஆங்காங்கே தி.மு.க. இளைஞர் அணி சார்பில் அமைத்திட வேண்டும்.
மாணவ, மாணவியர்க்கு பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்பித்தல், மகளிருக்கான கோலப் போட்டி–இசை நாற்காலி, இளைஞர்களுக்கு கிரிக்கெட், கபடிப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகளையும் மாவட்டம் முழுவதும் நடத்திட வேண்டும்.
 10 மற்றும் 12–ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெறும் மாணவச் செல்வங்களுக்கு இக்கூட்டம் மனம் நிறைந்த வாழ்த்துக்களை, பாராட்டுக்களை தெரிவிப்பதுடன்; கடந்த ஐந்து ஆண்டுகளில் 3328 மாணவ - மாணவியருக்கு ரூபாய் 1 கோடியே 98 இலட்சத்து 13 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து;
தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் 6வது ஆண்டாக இந்த ஆண்டும் கருணாநிதி பிறந்த நாளையொட்டி பரிசுத் தொகையும், சான்றிதழும் வழங்கி சிறப்பிக்க உள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடித்த ரயில் வெடிகுண்டு ஒரு பெண்ணின் உயிரைப் பறித்ததுடன் பலரையும் படுகாயப்படுத்தி, தலைநகரமான சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதி மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மத்திய உளவுத்துறை முன்கூட்டியே மாநில அரசுக்கு தகவல் கொடுத்து எச்சரித்திருந்தும், வெடிகுண்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு தடுக்கத் தவறிய ஜெயலலிதா தலைமையிலான மாநில அரசுக்கு கடும் கண்டனத்தை இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது. மின்தடையால் தொழில்துறை, விவசாயம், வணிகம் ஆகிய அனைத்துத் துறைகளையும் முடக்கிப் போட்டுள்ளதற்கு இக்கூட்டம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தனியார் பள்ளிகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை வழங்கி, சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் 25 சதவீத மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதில் எந்த தொய்வும் ஏற்பட்டு விடாதபடியும், சமூக நீதியை நிலைநாட்டும் வகையிலும் தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள அனுமதியளித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை இக்கூட்டம் வரவேற்று மகிழ்கிறது. தென்தமிழக விவசாயிகளின் உயிர்நாடிப் பிரச்சினையான முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை அரசியலாக்கும் ஜெயலலிதாவின் போக்கைக் கண்டித்து, அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது.
தமிழக இளைஞர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டுப் போட்டியை உரிய நெறிமுறைகளுடன் நடத்துவதற்கு உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுக வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

ad

ad