புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2014

அதிகார துஷ்பிரயோகத்தால் பதவி இழந்தார் தாய்லாந்து பிரதமர் 
தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா மற்றும் கேபினட் அமைச்சர்கள் 9 பேரை பதவி விலகுமாறு அந்நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
 
இதனையடுத்து அமைச்சரவை கூட்டத்தில், வர்த்தக்துறை அமைச்சராக இருந்த நிவ்வத்தம்ராங் போன்சாங்பைசாங் இடைக்காலப் பிரதமராக நியமிக்க ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
 
தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ராவுக்கு எதிராக, தாய்லாந்து நீதிமன்றில், எதிர்க்கட்சிகள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கில், கடந்த 2011 ஆம் ஆண்டு, பிரதமர் பதவியை பயன்படுத்தி, மூத்த அதிகாரியை பதவி மாற்றம் செய்ததன் மூலம் ஷினாவத் நாட்டின் அரசியல் சாசனத்தை மீறியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
மேலும், இந்த வழக்கில் பிரதமர் மட்டுமல்லாமல், அந்த பதவி மாற்றத்துக்கு உடந்தையாக இருந்த 9 அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
 
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பினால் தாய்லாந்தில் கடந்த ஆறு மாதங்களாகவே அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad