புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2014


கனடா டேவிட் பூபாலபிள்ளை BJP கட்சி மூத்த தலைவர்களைச் சந்தித்தார்

கனடியத் தமிழர் பேரவையின் தேசியப் பேச்சாளர் திரு டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் பீ யே பி கட்சியைச் சேர்ந்த தமிழ் நாட்டின் மூத்த தலைவர்களைச் சந்தித்தார்
பாரதீய யனதாக் கட்சியைச் (பீ யே பி/BJP) சேர்ந்த தமிழ் நாட்டின் மூத்த தலைவரான திரு எல் கணேசன் அவர்களையும் தேசியச் செயலாளர் மருத்துவர் திருமதி தமிழிசை சவுந்தரராசன் அவர்களையும் திரு டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் சென்னையில் இன்று சந்தித்தரார். திரு டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் பிரதமராகப் பதவி ஏற்ற மதிப்புக்குரிய நரேந்திர மோடி அவர்களுக்கும் இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் பீ யே பி அரசுக்கும் கனடியத் தமிழர் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இரு பீ யே பித் தலைவர்களும் புலம்பெயர் தமிழரின் வாழ்த்துக்களைப் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். 'மதிப்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஈழத் தமிழ் மக்களின் சிக்கல்கள் குறித்து தனிப்பட்ட முறையில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பிரதமர் மிகவும் அக்கறையோடு இருக்கிறார். ஈழத் தமிழருக்கு நிரந்தர அரசியற் தீர்வொன்று கிடைப்பது குறித்தும் அவர் அக்கறையோடு இருக்கிறார்.' என அவர்கள் தெரிவித்தனர்.
தமிழ் நாட்டிலுள்ள தொலைக்காட்சி ஒன்றிற்குத் திரு டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் வழங்கிய நேர்காணல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் மோடி அவர்களின் பதவியேற்பு விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபட்சே அவர்களுக்கு அழைப்பு விடுத்ததை ஒட்டி தமிழகத்தில் நடந்தப் போராட்டங்களை எப்படி பார்க்கிறீர்கள் ?
தமிழக மக்கள் எங்களின் குரலாகவே ஒலித்தனர். ஈழமக்களின் உணர்வுகளை தமிழக மக்கள் மிகப் பெரிய அளவில் உணர்ந்து வெளிப்படுத்தினார்கள் என்பது மிக மகிழ்ச்சியாக இருந்தது. தொடர்ந்து தாய்த் தமிழக மக்கள் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.
இதையும் மீறி ராஜபட்சே அவர்களை அழைக்கப் பட்டு அவர் பங்குப் பெற்றதை எவ்வாறு பார்க்கிறீர்கள் ?
அண்டை நாடுகளின் பிரதமர்களையும் அதிபர்களையும் அழைப்பது இந்திய நாட்டின் விருப்பம். அதன் அடிப்படையில் இதைத் தவறென்று கருத முடியாது. அதே சமயம் இது மோடி அவர்களின் ராஜத்தந்திரம் என்று சொல்வது உண்மையானால் மிக்க மகிழ்ச்சி.
மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை அதிபர் ராஜபட்சேவின் நண்பராக இருந்து வருகிறார் தற்பொழுது அவருக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி தந்திருப்பது பற்றி உங்கள் கருத்து ?
இந்தியாவின் பாரத பிரதமர் மோடி அவர்கள் இதற்கு முன்னால் குஜராத்தில் பிரச்சனைகளை கையாண்ட விதம் மற்றும் அவர் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் அவர் வெற்றிப் பெற்றிருப்பதையும் நாம் கண்டுள்ளோம். அதுப் போல் இதுவும் மோடி அவர்களின் ராஜத் தந்திரத்தில் ஒன்றாகத் தான் பார்க்க வேண்டும்.
முத்து மாலை நாடுகளை நரேந்திர மோடி அழைத்திருப்பதும் சீனா முத்து மாலை நாடுகளிடம் சுமூகமான உறவுகளை மேற்கொண்டிருப்பதும் எந்த மாதிரி மாற்றத்தைத் தரும் ?
பதவியேற்பு நிகழ்வு என்பது விழா சடங்கு போல் ஆகும்.அச்சடங்கில் முத்து மாலை நாடுகளை அழைத்து நிச்சயம் நல்ல மாற்றத்தைத் தரும். இலங்கையைப் பொருத்தவரை சீனாவும் பாகிஸ்தானும் வலுவாக காலூன்றி இருக்கிறார்கள். இது இந்தியப் பேரரசுக்கு ஆபத்து என்ற போக்கில் இந்த அழைப்பு மிகச் சரியானதே. இந்திய அரசு இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.
ராஜபட்சே அழைப்பை ஒட்டி கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிப்புக் குறித்து உங்கள் பார்வை என்ன ?
மீனவர்கள் கைது என்பதே மிக கேவலமான செயல். மேற்கத்திய நாடுகளில் மீனவர்கள் கடலில் திசைத் தெரியாமல் வேறு நாட்டின் கரையை அடைவார்கள். அவ்வாற திசை மாறி வந்த மீனவர்களை மிக வாஞ்சையுடன் கவனித்து அவர்களைப் பத்திரமாக அவர்கள் நாட்டிற்கு அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால் இங்கு மீனவர்கள் கைது செய்யப்படுவதும், கொலை செய்யப் படுவதும் ,அழைப்பிற்கு பின் விடுவிக்கப் படுவதும் அறுவருக்கத் தக்கச் செயல்.எனினும் அப்படியாவது விடுவிக்கப் பட்டார்களே என்ற மகிழ்ச்சி அடைய வைக்கிறது மறுபுறம்.
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் எப்படி நடத்தப் படவேண்டும் ?
மிக அன்பாகவும் வாஞ்சையுடனும் நடத்தப் பட வேண்டும். நான் நேற்று மதுரையிலிருந்து சென்னை வரும் வழியில் விளம்பரப் பதாகைகளைக் கண்டேன் அதில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலங்கை அகதிகளுக்கும் உண்டு என்று பார்க்கும் போது அவர்களையும் சகத் தமிழர்களாய்த் தான் கருதுகிறார்கள் என் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழக அரசியல் கட்சிகள் ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளை எப்படி கையாளுகிறார்கள் ?
மிக கவனமாக கையாளுகிறார்கள். கட்சிகள் பல்வேறு இருந்தாலும் ஈழத் தமிழர்களின் விடயத்தில் சிந்தனைகளும் நோக்கமும் ஒன்றாகத் தான் இருக்கிறது . இன்னும் ஒன்று பட்டு ஒருமித்தக் குரலில் ஓங்கி ஒலித்தல் வேண்டும். தமிழ்நாட்டை எங்கள் தந்தை நாடாகத் தான் பார்க்கிறோம்.எங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப் பட்டால் குழந்தைகள் தந்தையிடம் கேட்பது போல் நாங்கள் தமிழ்நாட்டைத் தான் நாடுவோம். குறிப்பாகத் தமிழகச் சட்டசபையில் ஏற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் வரவேற்கத் தக்கது.இத்தகையத் தீர்மானங்கள் எங்களுக்கு மன உறுதியைத் தருகிறது.
நீங்கள் புலம்பெயர்ந்து இருக்கும் கனடா நாடு ஈழத் தமிழர்களுக்கு எத்தகைய உதவியாய் இருக்கிறது ?
கனடா நாடும் கனடிய அரசும் ஈழத் தமிழர்களின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது. உலக நாடுகளுக்கு கனடிய அரசு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது. நடந்து முடிந்த காமன்வெல்த் மாநாட்டை எங்கள் கனடிய பிரதமர் புறக்கணித்ததே சிறந்த சான்று . அதே சமயம் அம்மாநாட்டினை அங்கு நடத்துவதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த அரசு கனடிய அரசு. எங்களுக்கு எப்போதும் துணை நிற்கும் அரசாகத் தான் திகழ்கிறது.

ad

ad