புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2014

கால்பந்து பயிற்சியாளர் மனைவி பிளேபாய் இதழுக்கு நிர்வாண போஸ்
சவுதி அரேபிய கால்பந்து கிளப் பயிற்சியாளரின் மனைவி பிளேபாய் இதழுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்ததைத் தொடர்ந்து ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
சவுதி அரேபியாவில் உள்ள பிரபலமான கால்பந்து கிளப்பான அல்-ஹிலால்விற்கு ருமேனியாவை சேர்ந்த லாரன்ஸ் டியு ரெகெகேம்ஸ் பயிற்சியாளராக நியமிக்கபட்டுள்ளார்.
இவர் இரண்டு வருடங்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.14 கோடிக்கு அந்த கிளப்பிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் இவரது மனைவி அன்ன மரியா புரோடோன் உலகக் கால்பந்து சங்க கூட்டமைப்பின் ருமேனியாவின் முதல் பெண் ஏஜண்டாக உள்ளார்.
இந்நிலையில் மரியா புரோடோன் பிளேபாய் இதழுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். இது ஐக்கிய அரபு நாடுகளின் கால்பந்து ரசிகர்களுக்கு கோபத்தை வரவழைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து பயிற்சியாளரால் அவரது மனைவியையே கட்டுப்படுத்த முடியவில்லை. பிறகு எப்படி அல்-ஹிலால் கால்பந்து வீரர்களை கட்டுப்படுத்த முடியும் என கால்பந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் கால்பந்து ரசிகர்கள் சமூக இணையதளங்கள் மூலம் அல்-ஹலால் கால்பந்து கிளப்புக்கு தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.


ad

ad