புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2014

விசாரணை குழுவை அமைக்கும் தீவிர நடவடிக்கையில் நவநீதம்பிள்ளை
மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய விசாரணை நடத்துவதற்கான குழுவினை நியமிக்கும் பணியில் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்
தெரிவிக்கின்றன.

அடுத்த மாதம் ஜூன் முதல் வாரத்தில் விசாரணை குழு தொடர்பான அறிவிப்பை நவநீதம்பிள்ளை வெளியிடவுள்ளதாக தெரியவருகிறது.

ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டுமென்று மனித உரிமை கண்காணிப்பகம் சில தினங்களுக்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்தது.

இதேபோல் விசாரணை குழு தொடர்பான அறிவிப்பை நவநீதம்பிள்ளை வெளியிட்டதும், இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள் இலங்கையிடம் கோரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மீதான விசாரணைக்கு தேவையான நிதியினை ஆணையாளர் நவநீதம்பிள்ளை பெற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்தே விசாரணைக்கான குழுவினை நியமிக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளார்.

விசாரணைக்குழுவில் இடம்பெறவுள்ள உறுப்பினர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை தற்போது இடம் பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. விசாரணை யோசனைக்கு இணங்க முடியாது என்ற அரசாங்கத்தின் முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லையென்று மனித உரிமை பேரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad