புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மே, 2014




ழகிரி ஆள் என்றாலே மதுரையில் எல்லாரும் அலறிய காலம் இருந்தது. அதற்கு நேர்எதிராக அழகிரியின் ஆட்கள் வரிசையாக ஒழுங்குப் பிள்ளைகளைப் போல சப்தநாடியும் அடங்கி, ஒவ்வொருவரும் ஒரு திக்கில் அடைக்கலம் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழலில் கடந்த வாரத்தில் நடந்தது, தி.மு.க. வட்டாரத்தில் மட்டுமல்ல, மதுரை அரசியல் வட்டாரம் முழுக்க, பெரும் பரபரப்பை உண்டுபண்ணிவிட்டது. 

2006-2011 ஆண்டு காலத்தில் மதுரை மேயராக இருந்த தேன்மொழியின் கணவர், கோபிநாதன். தேன்மொழி மேயர் ஆக்கப்பட்டதற்குக் காரணம், அழகிரியிடம் கோபிநாதன் கொண்ட விசுவாசம்தான். அண்மையில் அழகிரியை தி.மு.க.விலிருந்து விலக்கிய போதும், அவருடனேயே ஒட்டிக்கொண்டு, இரண்டு மாதங்களாக அழகிரியுடன் வெளியூர் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். அழகிரியின் விருப்பப்படி மதுரையில் தே.மு.தி.க.வுக்காக வாக்கும் கேட்டார். 

முன்னதாக, மதுரை தொகுதியில் தே.மு.தி.க.வுக்கு ஆதரவு தருவது பற்றி அழகிரி வீட்டில் பேச்சு நடந்தபோது, முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ்பாட்சா மற்றும் மிசா பாண்டியன்...

""நம்மப் பிடிக்காத விஜயகாந்த்துக்கு தி.மு.க.காரனா இருக்கிற நாம் எப்படி ஓட்டுக்கேட்க முடியும்?'' என எதிர்ப்பைக் காட்டினர். கவுஸ்பாட்சாவோ, ""பா.ஜ.க.வோட கூட்டுவச்சிருக்கும் தே.மு.தி.க.வுக்கு எங்க ஏரியாவுல ஓட்டுக் கேட்க முடியாது. வேணும்னா என் ஓட்டையும் எங்க குடும்ப ஓட்டையும் மட்டும் தே.மு.தி.க.வுக்கு போடச் செய்றேன்''’என்று சொல்ல... அதை அழகிரி ஏற்றுக்கொண்டார். 

அங்கிருந்த கோபிநாதனோ, ""என் ஏரியாவில் அந்த பிரச்சினை கிடையாது. நான் தே.மு.தி.க.வுக்கு பிரச்சாரத்துக்குக் கிளம்புறேன்''’என்றவர், (தேர்தலுக்கு முன்) ஒருவார காலமாக முரசு சின்னத்துக்கு ஆதரவாக, எம்.கே.புரம், ஜெய்ஹிந்த்புரம், சோலை அழகுபுரம் பகுதியில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்துக்கு கடைசி நாளான 22-ம் தேதி ஜெய்ஹிந்த் புரத்தில் இறுதி பிரச்சாரத்தை முடித்த வைகோவுடன் இணைந்து மேடையில் ஏறி, வைகோவுக்கு சால்வை போட்டு, முரசுக்கு ஓட்டும் கேட்டார். வாக்குப்பதிவு அன்றும் கோபிநாதனின் பிரச்சாரம் தொடர... 

85-வது வார்டு தி.மு.க. தேர்தல் பொறுப்பாளரான திருமுருகன் தி.மு.க.வுக்கு ஓட்டுக் கேட்டு வந்தார். இரு தரப்பும் மாறிமாறி கோஷம் எழுப்ப.. மோதல் நிலை உண்டாக, போலீஸ் வந்து இரு தரப்பையும் தடுத்து அனுப்பியது. 

வாக்குப்பதிவுக்குப் பின்னர், 26-ம் தேதி மாலை 6.30 மணிவாக்கில் திருமுருகனின் ஆதரவாளர்கள் சிலர், கத்திகளுடன் முன்னாள் மேயர் தேன்மொழியின் எம்.கே.புரம் வீட்டுக்குள் புகுந்து, ரகளை செய்துள்ளனர்.


""எங்கடா கோபிநாதன்? தி.மு.க.வை வைத்து மேயர் பதவியை அனுபவித்துவிட்டு, யாரோ சொன்னாருங்கிறதுக்காக, கட்சிக்காரங்களையே ஓட்டுப்போட விடாமல் தடுத்து, முரசுக்கு ஓட்டுப்போட விட்டிருக்கான். எங்கடா அவன்?''’என கொலைவெறியோடு, அந்த கும்பல் கோபிநாதனின் வீட்டில் ஒவ்வொரு அறையையும் சல்லடை போட்டுத் தேடியது. கோபிநாதன் வீட்டில் இல்லாததால், எச்சரித்துவிட்டு அந்த கும்பல் ஓடிப்போனது. சம்பவத்தின்போது வீட்டில் இருந்த முன்னாள் மேயர் தேன்மொழி, கத்தி, வெட்டுக்குத்து ஆயுதங்களைப் பார்த்து, மயக்கம் அடைந்து விழுந்துவிட்டார். 

கருப்பாயி ஊரணி பகுதிக்கு உறவினர் வீட்டுக்குப்போன கோபிநாதனுக்குத் தகவல்போக.. அலறியபடி வீடு திரும்பிய அவர், ஜெய்ஹிந்த்புரம் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார். உயிருக்கு அச்சுறுத்தல் என வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு வாங்கியுள்ளார். 

கோபிநாதனிடம் பேசியபோது, ""அழகிரியின் ஆணைப்படி முரசுக்கு ஓட்டு கேட்டதை வைத்து ஆரம்பத்தில் ஃபோனில் மிரட்டினாங்க. 26-ம் தேதி நான் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, கொலை மிரட்டல் விட்டுப்போயிருக்காங்க''’என்றார் அச்சம் விலகாமல்.

ஜெய்ஹிந்த்புரம் இன்ஸ்பெக்டர் வைரத்திடம் சம்பவம் பற்றிக் கேட்டதற்கு, ""முன்னாள் மேயரின் கணவர் கோபிநாதனைத் தேடி அவங்க வீட்டுக்குள்ள போயிருக்காங்க. நல்லவேளை, அவர் அங்க இல்லாததால, அசம்பாவிதம் எதுவும் நடக்கலை. பாட்டிலை மட்டும் உடைச்சிட்டுப் போயிட்டாங்க. அவர் கொடுத்த புகாரின் பேர்ல, திருமுருகன்கிறவரை கைது செஞ்சோம். சூர்யா, ஐம்பொன் ரெண்டுபேரும் தலைமறைவாயிட்டாங்க''’என்றார். 

தொடர்ந்து, கடந்த 28-ஆம் தேதியன்று திருமுருகன் சார்பில் நீதிமன்றத் தில் பிணை கேட்கப்பட்டபோது, அதற்கு கோபிநாதன் தரப்பில் கொஞ்சம்கூட எதிர்ப்பு தெரிவிக்காதது, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 

கோபிநாதன் தரப்பில் விசாரித்தபோது, இந்த விவகாரத்தை மேற்கொண்டு வளர்க்க விரும்பவில்லை என்றும் அதனால்தான் பிணை கொடுப்பதை எதிர்க்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார்கள். 

எவ்வளவுதான் அழகிரிக்கு விசுவாசமாக இருந்தாலும், இன்னொரு பொட்டு சுரேசாக ஆவதற்கு அழகிரியின் எந்தத் தொண்டரும் தயாராக இல்லை. 

இந்த விவகாரத்தில் ஒவ்வொரு தகவலையும் அழகிரியிடம் சொல்லியபடி இருந்திருக்கிறார்கள், அவரது நெருக்க வட்டத்தினர். ஆதரவாளர்களுடன் சேர்ந்து, அழகிரியும் பேரதிர்ச்சியின் அலைகளில் இருந்து இன்னும் மீளவில்

ad

ad