புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மே, 2014


துரைமுருகன் அதிலே நல்ல “எக்ஸ்பர்ட்” அவரைக் கேட்டுக் கொள்ளுங்கள்: கலைஞர்

திமுக தலைவர் கலைஞர் சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்தித்தார்.
 உச்ச நீதி மன்றத்தில் முல்லைப் பெரியாறு பற்றி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வந்துள்ளதே?


 முல்லைப் பெரியாறு பற்றி இன்று வந்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சிக்குரியது. கேரளா தடுப்பு அணை கட்டக்கூடாது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதன் விவரங்களுக்குள் தற்போது நான் நுழைய விரும்பவில்லை. விவரங்கள் தேவையென்றால், முல்லைப் பெரியாறு பற்றி அறிய வேண்டுமேயானால், இதோ இங்கே முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், அதிலே நல்ல “எக்ஸ்பர்ட்”; அவரைக் கேட்டுக் கொள்ளுங்கள்.
 தேர்தல் ஆணையத்திடம் தி.மு. கழகத்தின் சார்பில் பல புகார்களைக் கொடுத்திருக்கிறீர்களே, ஏதாவது நடவடிக்கை எடுத்ததா?
இதுவரையில் எடுக்கவில்லை.
 ஜல்லிக்கட்டு பற்றி உச்ச நீதி மன்றம் இன்று தீர்ப்பளித்திருப்பது குறித்து?
தீர்ப்பு பற்றிய முழு விவரம் வரவில்லை. எனவே அது பற்றி இப்போது கூறுவதற்கில்லை.
தமிழகத்தில் அன்றாடம் கிலோ கணக்கில் தங்கம் கொள்ளையடிக்கப்படுகின்ற நிகழ்ச்சிகள் நடைபெ றுகின்றன. சட்டம், ஒழுங்கே சீர் கெட்டுக் கிடக்கிறதே, அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்ளும் அளவில் இல்லை.
 தமிழ்நாட்டுக் காவல் துறையினரிடம் அ.தி.மு.க. சார்பில் கொடுக்கப்படும் புகார்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து விட்டு, தி.மு.க. சார்பில் கொடுக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்களே?
அது தான் அ.தி.மு.க. அரசின் காவல் துறையினர் கடைப் பிடிக்கும் மரபு என்று பதிலளித்தார்

ad

ad