புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2014

இராணுவ பிரசன்னத்தை தடுக்க முடியாத டக்ளஸ் இனப்பிரச்சனையை தீர்க்க அழைக்கின்றார்; பிரேமச்சந்திரன் 
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்வுக் குழுவில் பங்கேற்க வேண்டும் என டக்ளஸ் தேவனந்தாவல் மீண்டும் விடுக்கப்பட்ட அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்துள்ளனர். 

 
பல தசாப்தங்களாக நீடித்திருக்கும் இனப்பிரச்சினையை ஒரு காலக்கெடுவுக்குள் தீர்ப்பதற்கு பாராளுமன்றத் தேர்வுக் குழுவாலேயே முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 
 
ஆனால் இப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசுக்கும், கூட்டமைப்புக்கும் இடையே ஒரு அனுசரணையாளராக பேச்சுவார்த்தைகளை தொடங்க தென் ஆபிரிக்கா உதவ முன்வந்துள்ள நிலையில், அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே டக்ளஸின் முன்னெடுப்பு அமைந்துள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். 
 
இலங்கையில் தமிழர்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என்றும் , நல்ல பல சந்தர்பங்கள் கூட்டமைப்பின் நிலைப்பாட்டாலேயே வெற்றிபெறவில்லை என்றும், அதுபோன்ற ஒரு நிலை மீண்டும் ஏற்படக் கூடாது எனவும் டக்ளஸ் கூறுகிறார். 
 
ஆனால் நாட்டின் வடக்கே இராணுவத்தின் பிரசன்னம், ஆட்கள் கைது செய்யப்படுவது போன்ற பிரச்சினைகளையே தீர்க்க முடியாத இவரால் இனப் பிரச்சினைக்கான தீர்வில் எவ்வாறு பங்காற்ற முடியும் எனக் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
இதேவேளை இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் பல்வேறு பல காரணங்களுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தடைபட்டுள்ளமை குறிப்பிடத்தகுந்தது

ad

ad