புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2014

கொன்சலிற்றாவுடன் தொடர்பில்லை; பெற்றோர் கூறுவது மனவருத்தமாக உள்ளது என்கிறார் நிக்சன் பாதர் 
மறைக்கல்வி ஆசிரியர் என்ற ரீதியிலேயே கொன்சலிற்றாவுக்கும் எனக்கும் இடையில் தொடர்புகள் இருந்ததே தவிர பெற்றோர் கூறுவது போல எந்தத்தொடர்பும் இல்லை. இவர்களின்
கூற்று மிகவும் மனவருத்தத்தினைத் தருகிறது என கொன்சலிற்றாவின் சாவுடன் தொடர்பு என பெற்றோர்களால் குற்றஞ்சாட்டப்படும் பெரியகோயில் பாதிரியார்களுள் ஒருவரான நிக்சன் கொலின் மன்றில் சாட்சியமளித்தார்.

கொன்சலிற்றா தொடர்பிலான வழக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி பி.சிவகுமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்படி பாதிரிமார்கள் இருவரும் மன்றிற்கு சமுகமளித்திருந்ததுடன் கொன்சலிற்றாவின் சாவு குறித்தும் சாட்சியமளித்திருந்தனர். அதன்போதே பாதிரியார் நிக்சன் மேற்கண்டவாறு மன்றில் சாட்சியமளித்தார்.

அவர் மேலும் சாட்சியமளிக்கையில்,

நான் பெரியகோயிலினுடைய பாதிரியாக கடந்த 10மாதங்களாக உள்ளேன். அங்கே மறைகல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது. சுமார் 600 வரையான மாணவர்களும் 35 ஆசிரியர்களும் உள்ளனர்.அவர்களில் 2ஆண்களும் ஏனையோர் பெண்களாவார்.

அதன்படி மறைக்கல்வி ஆசிரியர்களுள் ஒருவராக கடந்த 3 மாதங்கள் கொன்சலிற்றா பணியாற்றியிருந்தார். எனினும் கடந்த ஒன்றரை மாதங்களாக கொன்சலிற்றா சமுகம் தரவில்லை.

எனினும் சக ஆசிரியர்கள் கொன்சலிற்றா வீட்டிற்கு சென்றதாக தெரிவித்தனர். அதனையடுத்து ஒரு நாள் நானும் அவர் வீட்டிற்கு சென்றேன். அப்போது வெளி வாசலில் அவருடைய அம்மா வந்து கொன்சலிற்றா கிளிநொச்சி போய்விட்டதாக கூறினார். தொலைபேசியில் இரண்டு , மூன்று தடவைகள் தொடர்பை ஏற்படுத்தினேன் எனினும் தொலைபேசி நிறுத்தப்பட்டிருந்தது.

அவருக்கு வேறு யாருடனும் கோபங்கள் இருப்பதாகவோ காதல் தொடர்பு இருப்பதாகவோ எனக்கு தெரியாது. கிணற்றுக்குள் கொன்சலிற்றாவின் சடலம் கிடப்பதாக 14 ஆம் திகதி மதியம் 3 மணியளவில் மறைக்கல்வி தலைமை ஆசிரியர் என்னிடம் தெரிவித்தார்.

எனினும் நான் அங்கு செல்லவில்லை. கொன்சலிற்றா மறை கல்வி ஆசிரியர் என்ற ரீதியில் தொடர்புகள் இருந்தன. சில வேளைகளில் வகுப்புக்கள் மற்றும் கூட்டங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு குட் மோணிங் , குட் ஈவினிங் என கூறி விடயத்தை தெரியப்படுத்துவேன்.

இருப்பினும் பெற்றார் கூறுவது போல எனக்கு தனிப்பட்ட தொடர்பும் கிடையாது. பெற்றோரின் கூற்று மனவருத்தத்திற்கு உரியது என அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad