புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மே, 2014

டெல்லியை வீழ்த்தி மும்பை அசத்தல் வெற்றி 
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை, டெல்லி அணிகள் மோதின. முதலில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி களதடுப்பை தேர்வு செய்தது.
 
மும்பை அணியின் தொடக்க வீரர்களாக சிமன்சும், ஹசியும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி வந்தனர். இதனால் அணியின் ஓட்டம் விறுவிறுவென உயர்ந்தது. இம்ரான் தஹிர் வீசிய ஆட்டத்தின் எட்டாவது ஓவரில் 25 பந்துகளில் 35 ஓட்டங்கள் சேர்த்த சிமன்ஸ் ஆட்டமிழந்தார். பின்னர் ஹசியுடன் கப்டன் ரோகித் சேர்ந்தார்.
 
இவரும் டெல்லி பந்துவீச்சை பதம் பார்த்தனர். ஆட்டத்தின் 12 ஓவரில் ஹசி ஆட்டமானார். பின்னர் 4வது விக்கெட்டுக்கு பொல்லார்டு களமிறங்கினார். அதிரடியாக ஆடி வந்த ரோகித் 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அடித்து ஆட முற்பட்டு 11 ஓட்டங்களில் பொல்லார்டும் நடையை கட்டினார். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ஓட்டங்களை குவித்து மும்பை அணி ஆட்டமிழந்தது.
 
174 ஓட்டங்கள் என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய்யும், கெவின் பீட்டர்சனும் களமிறங்கினர். ஒரு முனையில் பீட்டர்சன் அதிரடியாக ஆட மறுமுனையில் பந்துகளை சந்திக்க விஜய் திணறினார். ஆட்டத்தின் 6வது ஓவரின் போது 8 ஓட்டங்கள் எடுத்திருந்த விஜய் கோபால் பந்துவீச்சில் ஆட்டமானார். 3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கார்த்திக்கும் ஓட்டம் குவிக்க திணறினார். அதிரடியாக ஓட்டங்களை குவித்த பீட்டர்சன் 44 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார்.
 
கார்த்திக்கும் சிறிது நேரத்தில் ஆட்டமாகி நடையை கட்டினார். பின்னர் திவாரியும், டுமினியும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடி வந்தனர். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர். 31 பந்துகளில் 41 ஓட்டங்களை குவித்த திவாரி ஆட்டத்தின் 19வது ஓவரில் டி லாங்கே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜாதவ் டுமினியுடன் ஜோடி சேர்ந்தார்.
 
ஆட்டத்தின் கடைசி ஓவரை பும்ரா வீசினார். 6 பந்துகளில் 25 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் டுமினி முதல் பந்தில் ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்தார். அடுத்த பந்தில் ஜாதவும் ஒரு ஓட்டம் மட்டுமே அடித்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 158 ஓட்டங்களுக்கு டெல்லி அணி ஆட்டமிழந்தது. மும்பை அணி டெல்லி அணியை 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

ad

ad