புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2014

சுவிசில் திறக்கப்படும் சார்லி சாப்ளின் நினைவகம்

சுவிசில் உலகப்புகழ் பெற்ற நகைச்சுவையாளரான சார்லி சாப்ளின் நினைவகத்தை கட்ட அவரது குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இங்கிலாந்தில் பிறந்து உலகளவில் நகைச்சுவையால் அனைவரையும் தன் வசம் இழுத்த பிரபல நகைச்சுவையாளர் சார்லி சாப்ளின்.
இவர் நகைச்சுவையாளராய் மட்டுமல்லாது திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர்,எடிட்டர் மற்றும் இசை அமைப்பாளர் என பல்வேறு துறைகளில் வலம் வந்து புகழின் உச்சத்தை எட்டிள்ளார்.
இந்நிலையில் சுவிசிலுள்ள வாயூத் மாகாணத்தில் தனது சொந்த மாளிகையை அருங்காட்சியகமாய் மாற்ற கடந்த 14 வருடங்களாக இவரது குடும்ப உறுப்பினர்கள் முயன்று வருகின்றனர்.
தற்போது நீண்ட காலத்தடைகளை கடந்து வந்து இவரது மாளிகையை அருங்காட்சியமாய் மாற்றி, இவரது மூன்று மகன்கள் செய்யும் புதுப்பிக்கும்பணி, வரும் 2016ம் ஆண்டிற்குள் நிறைவடைந்துவிடும் என கூறப்படுகிறது.
மேலும் இதற்கு சுமார் 40 மில்லியன் பிராங்குகள் (45.7 மில்லியன் டொலர்கள்) செலவு செய்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் உலகத்திற்கு அவர் அர்பணித்த பொருட்கள் அலங்கரிக்கப்பட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.
இதனைதொடர்ந்து அவரது திரையுலக வரலாறு, ஹாலிவுட்டில் நட்சத்திரமான அவரது வளர்ச்சி மற்றும் அவர் நடித்த படங்கள் உள்ளிட்ட அனைத்தும் செட்டுகள் போட்டு பார்வையாளர்களுக்கு வைக்கப்படவுள்ளது.

ad

ad