திங்கள், மே 26, 2014

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்கள் திரட்ட நடவடிக்கை 
news
புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், யுத்த காலத்தில் வெளி மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து மீளக் குடியேறிய, குடியேற்றப்பட்டவர்களது விபரங்களைத்திரட்டும் பணியில் தாம் ஈடுபட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவ்ட சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் வ.கமலதாஸ் தெரிவித்தார்.
 
புனர்வாழ்வு பெற்ற போராளிகள் பலர் பல்வேறு பிரச்சினைகள் நிதி தொடக்கம் வாழ்வாதாரம் வரை அனுபவித்து வருகின்றனர் அந்த அடிப்படையில் இந்த நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளோம்.
 
முன்னாள் போராளிகள் பலர் சுயதொழில்களில் ஈடுபடக்கூடிய வலுவுடன் இருந்தாலும் நிதிப்பிரச்சினைகளை எதிர் கொள்கிறார்கள். அதே நேரம், அவர்கள் இன்னமுமு; சமூகத்திடமிருந்து விலகியிருப்பவர்களாகவும், பல்வேறுபட்ட வாழ்வாதாரப்பிரச்சினைகளை நாளாந்தம் எதிர் கொள்கிறார்கள்.
 
அத்துடன், இவர்கள் தமது சுயதொழில்களுக்காக வங்கிகளில் கடன்களைப் பெற்றுக் கொள்வதிலும், தொழில் உபகரணங்ஙகளை கொள்வனவு செய்வதிலும், சில நிறுவனங்களில் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதிலும் சிக்கல்கள் காணப்படுவதாக அறியமுடிகிறது.
 
அதே நேரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து யுத்தம் நடைபெற்ற காலங்களில் வெளி மாவட்டங்களான வழக்கின் வன்னி, முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற இடங்களில் வசித்து யுத்தம் முடிவுற்றபின்னர் பெருருந்தொகையானோர் அழைத்து வரப்பட்டனர். இவர்களுக்கு இன்னமும் முழுமையான வீ;டு வாழ்க்கை வசதிகள் கிடைப்பதில் பிரச்சினைகள் உள்ளன.
 
இதே வேளை, இந்தியாவின் தமிழ் நாட்டிற்கு இடம் பெயர்ந்து வாழ்ந்துவந்த ஒரு தொகையினரும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்துவரப்பட்டனர் இவர்களுடைய வசதிகளும் இதுவரை பு}ர்த்தியாக்கப்பட்டதாக அறிய முடியவில்லை.
 
அந்த வகையில் இவ்வாறானவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலும், அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற தேவைகளுக்காகவும் விபரங்களைத்திரட்டும் நடவடிக்கைகளில் சிவில் பிரஜைகள் சபை ஈடுபடுகிறது.
 
எனவே மாவட்டத்திலுள்ள புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், யுத்த காலத்தில் வெளி மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து மீளக் குடியேறிய, குடியேற்றப்பட்டவர் தமது விபரங்களை எமது மட்டக்களப்பு கல்லடியிலுள்ள அலுவலகத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனவும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் வ.கமலதாஸ் தெரிவி