புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2014

கைதான புலித் தலைவர்களை நாடு கடத்துகிறது மலேசியா 
news
விடுதலைப் புலிகள் அமைப்பை மீளஉருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும், இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்த நாட்டின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

 
ஐரோப்பாவிலும், ஏனைய நாடுகளிலும் உள்ள தமது தொடர்புகள் மூலம் இவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பை மீளஉருவாக்க முயற்சித்தார்கள் என தனது பெயரை வெளியிடாத அந்த அதிகாரி பி.பி.சியிடம் கூறியுள்ளார். 
 
பல நாடுகளில் தடை செய்யப்பட்ட அந்த அமைப்புக்கு நிதி சேகரிப்பது மற்றும் அதற்கான பரப்புரைகளை செய்வது ஆகிய நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இவர்கள் மலேசியாவில் உரிய விஸா மற்றும் ஆவணங்கள் இல்லாமல் பல ஆண்டுகளாகத் தங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த 15ஆம் திகதி நடத்தப்பட்ட தீவிரவாத முறியடிப்புப் பிரிவினரால் தேடுதலில் கைது செய்யப்பட்ட இவர்கள், விரைவில் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும், இது குறித்து இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
கைது செய்யப்பட்டவர்கள் தமது குடும்பத்தினரையும் தம்முடன் தங்கவைத்திருந்தனர் என்றும் இவர்கள் 1983 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற போரில் முக்கிய பங்கு வகித்தவர்கள் என்றும் மலேசிய பொலிஸ் கூறியுள்ளது

ad

ad